சீனாவுடன் போரிட தயாராகும் டிரம்ப்! » Sri Lanka Muslim

சீனாவுடன் போரிட தயாராகும் டிரம்ப்!

trump

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ஆக்கம் – நன்றி இணையம்
அனுப்புனர் -அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்


இன்னும் இரண்டு வாரங்களில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப், தனது ஆட்சிக் காலத்தில் முற்றிலும் சீனாவுக்கு எதிரான வர்த்தகப் போரை – முடிந்தால் ராணுவ ரீதியான போரை நடத்துவது நோக்கிகாய்களை நகர்த்துவார் என்பது தெரியவந்துள்ளது.

கடந்த சுமார் 8 ஆண்டுகாலமாக லிபியா, சிரியா, இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் என ரஷ்யாவை சுற்றியுள்ள நாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் மிகக் கொடூரமான போர்களை நடத்தியது; லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தது; எனினும் ஒட்டுமொத்த வளைகுடா – மத்திய ஆசியா பிரதேசத்தையும், அதன் தொடர்ச்சியாக ரஷ்யாவையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவது என்ற நோக்கத்தை அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. இதுதொடர்பான அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகள் அப்பட்டமான தோல்வியை தழுவியுள்ளன.

இனியும், இந்த பிரதேசத்தில் அதிக கவனம் செலுத்துவதற்கு மாறாக, சீனாவையும் அதைச் சுற்றியுள்ள ஆசிய நாடுகளையும் குறிவைத்து காய்களை நகர்த்துவது என அமெரிக்க ஏகாதிபத்தியம் திட்டமிட்டுள்ளது. அந்த திட்டங்களையே புதிதாக பதவியேற்க போகும் ஜனாதிபதி டிரம்ப் செயல்படுத்துவார் என தெரிகிறது. அதற்காக இப்போதிருந்தே, சீன எதிர்ப்பு நடவடிக்கைகளை டிரம்ப் துவக்கிவிட்டார். தனது நிர்வாகத்தின் வர்த்தகத் துறை அமைச்சராக வில்பர் ரோஸ் என்பவரையும், வர்த்தகத்துறை கொள்கைக்கான அமைச்சராக ராபர்ட் லைத்திசர், தேசிய வர்த்தக கவுன்சிலின் தலைவராக பீட்டர் நவர்ரோ ஆகியோரையும் டிரம்ப் நியமித்துள்ளார். இந்த மூன்று பேருமே அதிதீவிர சீன எதிர்ப்பாளர்கள்.

சீனாவுடன் எந்தவிதமான வர்த்தக நடவடிக்கைகளும் வைத்து கொள்ளக் கூடாது என்று கூறுபவர்கள். சீனாவுக்கு அமெரிக்காவின் சந்தையை திறந்துவிட்டதால்தான், அமெரிக்காவின் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது என்ற கருத்தைக் கொண்டிருப்பவர்கள். உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை தீவிரமாக உலகெங்கிலும் அமலாக்க வேண்டும் என்று ஒரு காலத்தில் வாதிட்ட அமெரிக்கா, அதே விதிகளின் படி இப்போது, சீனா அமெரிக்காவின் சந்தைக்குள் புகுந்து அனைத்தையும் கைப் பற்றியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறது.
2001 ஆம் ஆண்டுதான் உலக வர்த்தக அமைப்பிலேயே சீனா இணைந்தது. கடந்த 15
ஆண்டுகளில், உலக வர்த்தக அமைப்பு வரையறு த்துள்ள விதிகளின்படியே, உலகெங்கிலும் தனது வர்த்தக எல்லையை சீனா விரிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் சந்தையில் கணிச மான அளவு சீனாவின் கைக்கு வந்துவிட்டது. ஒட்டுமொத்த உலகின் பொருட்கள் ஏற்றுமதி யில் சீனாவின் பங்கு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

இதற்கு மாறாக, உலக அளவிலான ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு 30 சதவீதம் வீழ்ச்சி யடைந்துள்ளது. இது உலகப் பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றம் ஆகும். ஏற்றுமதி துறையில் பெருமளவு சந்தையை கைப்பற்றியது மட்டுமல்ல, இன்றைய நிலையில் உலகின் மிகப் பெரிய பொருள் உற்பத்தி நாடாகவும் சீனா தனது பலத்தை அதிகரித்துள்ளது. எளிதாக கிடைக்கும் தொழிலாளர் சந்தை, உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான சந்தை மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் போன்றவை சீனா வின் அசைக்க முடியாத பலமாக உள்ளது. இதன்விளைவு, உலகின் பல நாடுகளிலிருந்து பன்னாட்டு பெரும் நிறுவனங்கள், தங்களது உற்பத்தி நிறுவனங்களை சீனாவுக்கு மாற்றி விட்டன. அமெரிக்காவிலிருந்தும் கூட மிகப் பெரும் கார்ப்பரேட் கம்பெனிகள் சீனாவுக்கு இடம் பெயர்ந்துவிட்டன.

எங்கு சென்றால் லாபம் கிடைக்குமோ அந்த இடத்தை நோக்கி மூலதனம் பறந்து செல்லும் என்பது பொருளாதார விதி. அந்த விதிக்கு கடந்த 10 ஆண்டுகாலத்தில் இலக்காகி சிக்கி சீரழிந்தது அமெரிக்க பொருளாதாரமே என்பது குறிப்பிடத் தக்கது. இத்தகைய பின்னணியில் தான், 2008 இல் மிகப் பெரும் நெருக்கடியில் சிக்கிய அமெரிக்கப் பொருளாதாரம் எந்த விதத்திலும் மீட்சிப் பெற முடியா மல் திணறிக் கொண்டிருக்கிறது. எந்த உலக வர்த்தக அமைப்பின் கொடூர மான விதிகளின் கீழ் உலகில் பல நாடுகளது சந்தைகளை கைப்பற்றி பெரும் சீரழிவுகளை ஏற்படுத்தி யதோ, அதே விதிகளின் கீழ் சீனாவிடம் தனது பொரு
ளாதாரத்தை சிக்க வைத்திருக்கிறது அமெரிக்கா.

இந்நிலையில், இந்த உண்மைகளை மறைத்து, சீனா தன்னிச்சையாக அமெரிக்காவின் சந்தையை சதி செய்து கைப்பற்றிவிட்டது போலவும், அமெரிக்க தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை சீனாவே கெடுத்துவிட்டது என்றும் அந்நாட்டின் வலதுசாரி பிற்போக்கு சக்திகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றன. அந்தப் பிரச்சார த்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர்களே, டிரம்ப் நிர்வாகத்தில் வர்த்தக துறைகளின் அமைச்சர் களாக நியமிக்கப்பட்டுள்ள மேற்கூறிய மூன்று நபர்களும். இவர்களது தலைமையின் கீழ் ஜனவரி 20க்கு பிறகு செயல்பட உள்ள டிரம்ப் அரசின் வர்த்தகத் துறை முற்றிலும் சீனாவுக்கு எதிராகவே செயல் பட உள்ளது. இதற்காக, முந்தைய ஒபாமா நிர்வா கம் பங்கேற்றிருந்த டிபிபி எனக் கூறப்படும் டிரான்ஸ் பசிபிக் பார்ட்னர்சிப் – அதாவது பசிபிக் பிராந்தியம் முழுவதிலும் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் கூட்டு – என்ற அணிசேர்க்கையில் அமெரிக்கா பங்கேற்றிருந்தது. ஆனால் வெறுமனே பங்கேற்பு என்பதை மாற்றி, முழுமையாக தானே தலைமையேற்று பசிபிக் பிராந்தியத்தில் வர்த்தக ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தீவிரமாக தலையிடுவது என்ற இலக்கினை டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனால்தான், ஒபாமா நிர்வாகத்தின் டிபிபி கூட்டணியை, டிரம்ப் தனது பிரச்சாரத்தின்போதே கடுமையாக விமர்சித்திருந்தார்.

வர்த்தக ரீதியாக மட்டுமின்றி, பசிபிக் பிராந்தியத்தில் ராணுவ ரீதியான தலையீட்டை தீவிரப்படுத்தும் முயற்சியாக ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட கடல் பகுதிகளில் தற்போது முகாமி ட்டுள்ள அமெரிக்க போர் கப்பல்களின் எண்ணிக்கையை பல மடங்கு அதிகரிக்கவும் டிரம்ப் திட்ட மிட்டிருப்பது தெரியவந்துள்ளது. தற்போது இந்த பகுதிகளில் கிட்டத்தட்ட 90 ஆயிரம் அமெரிக்க ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையை உயர்த்தவும், தற்போது உள்ள 40 என்ற போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 350 ஆக அதிகரிக்கவும் டிரம்ப்பின் பாதுகாப்புத் துறை ஆலோசித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை அனைத்தும் சீனாவை அச்சுறுத்தும் நோக்கத்துடனே நடக்கவுள்ளது.

ஆனால் சீனாவுடன் முழுமையான மோதல் போக்கிற்கு இட்டுச் செல்லும் டிரம்ப் நிர்வாகத்தின் இந்த திட்டங்கள், உலக அளவில் பெரும் பதற்றத்திற்கே வழிவகுக்கும் என்றும், அமெரிக்கா என்ன செய்கிறதோ அதற்கு மேலாகவே சீனா பதிலடி கொடுக்கும் என்றும் அத்தகைய பலம் தற்போது சீனாவிற்கு இருக்கிறது என்றும் அமெரிக்காவின் தற்போதைய வர்த்தகத் துறை செயலாளர் பென்னி பிரிட்ஜ்கர் தெரிவித்துள்ளார். இதை தலைப்புச் செய்தியாக்கியுள்ளது பைனான்சியல் டைம்ஸ் எனும் அமெரிக்க ஏடு.

Web Design by The Design Lanka