சீன அணுவாயுத கப்பல் – வெளியேறும்படி இலங்கை உத்தரவு - Sri Lanka Muslim

சீன அணுவாயுத கப்பல் – வெளியேறும்படி இலங்கை உத்தரவு

Contributors

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அணு ஆயுத திரவியங்களைக் கொண்ட வெளிநாட்டுக் கப்பலொன்று வந்துள்ளமை பற்றிய தகவல் குறித்து உண்மை நிலைவரத்தை தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை விசேட உரையொன்றை ஆற்றியபோது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

அணுவாயுத அதிகார சபையின் அனுமதியின்னறி நேற்றைய தினத்தில் இவ்வாறான கப்பல் வருகை தந்திருப்பதாகவும், குறைந்த பட்சம் அந்தக் கப்பல் பரிசோதனைக்குக்கூட உட்படுத்தப்படவில்லை என்றும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.

அதற்கமைய உடனடியாக விசாரணை நடத்தி தகவல்களை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டுமென்றும் அவர் கூறினார்.

இதேவேளை, குறித்த சீனக் கப்பலை உடனடியாக வெளியேறும்படி இலங்கை அறிவித்துள்ளது.

இலங்கை அணு ஆயுத மற்றும் மின்சக்தி நிர்வாக ஆணைக்குழு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team