சீன உரக்கப்பல் தொடர்ந்தும் கடலில் நிற்பது ஏன்? வெளியான சந்தேகம்..! - Sri Lanka Muslim

சீன உரக்கப்பல் தொடர்ந்தும் கடலில் நிற்பது ஏன்? வெளியான சந்தேகம்..!

Contributors
author image

Editorial Team

நாட்டின் மண்ணுக்கும் பயிர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் பக்டீரியா சீனாவின் கரிம உரத்தில் இருப்பதாக நிரூபிக்கப்பட்ட போதிலும், பலகோடி ரூபாய் செலவழித்து அந்த உரக்கப்பலை கடலில் வைத்திருப்பது ஏன் என அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன(Namal Karunaratne) கேள்வி எழுப்பியுள்ளார்.

Qingdao இன் புதிய சான்றிதழின் கீழ் குறித்த கரிம உரத்தை இறக்குமதி செய்யும் திட்டம் உள்ளதா என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இந்த உரம் இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால், அந்நாட்டு அதிகாரிகளுக்கு இது தெரியாதா? அல்லது இதனை இறக்குவது தொடர்பாக செயல்படுகிறதா?உரக்கப்பல் தற்போது மலாக்கா கடல் எல்லையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கருணாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக அவ்வாறான கப்பல்களை குறித்த கடற்பரப்பில் தடுத்து வைக்கும் பட்சத்தில் அதற்கான கட்டணத்தை கப்பல் நிறுவனங்களே செலுத்த வேண்டும் எனவும் கப்பல் நிறுவனம் சான்றிதழ்களை மாற்றி இலங்கையில் குறித்த உரத்தை இறக்க முயற்சி செய்யலாம் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team