சீன தடுப்பூசிக்கு எதிராக மருத்துவ சபை போர்க்கொடி - Sri Lanka Muslim

சீன தடுப்பூசிக்கு எதிராக மருத்துவ சபை போர்க்கொடி

Contributors

தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் அனுமதியின்றி நாட்டில் Sinopharm தடுப்பூசி வழங்கப்படக்கூடாது என இலங்கை மருத்துவ சபை சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை மருத்துவ சபை சுகாதார அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sinopharm தடுப்பூசியின் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் நோயெதிர்ப்புத் திறன் குறித்து தீர்மானிக்க போதுமான தரவு தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடுப்பூசிகள் தொடர்பான அனைத்து விடயங்களையும் மீளாய்வு செய்ததன் பின்னரே நாட்டில் மக்கள் பாவனைக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் நாட்டில் பொது மக்களுக்கு Sinopharm தடுப்பூசி வழங்குவதற்கு முன்னர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைக்கமைய தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் அனுமதியுடன் மாத்திரமே நாட்டில் Sinopharm தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட வேண்டும் என இலங்கை மருத்துவ சபை சுகாதார அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மருத்துவ சபையின் தலைவர் வைத்தியல் பத்மா குணரட்ன கையெழுத்திட்டுள்ள குறித்த கடிதம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உட்பட ராஜாங்க அமைச்சர்களான சன்ன ஜயசுமன, சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேலகுணவர்தன ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Web Design by Srilanka Muslims Web Team