“சீன தடுப்பூசியை போட்டுக்கொண்டு எமது நாட்டுக்கு வர வேண்டாம்” இலங்கையர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! - Sri Lanka Muslim

“சீன தடுப்பூசியை போட்டுக்கொண்டு எமது நாட்டுக்கு வர வேண்டாம்” இலங்கையர்களுக்கு அதிர்ச்சி செய்தி..!

Contributors

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்வதற்கு பைசர் தடுப்பூசி பெற்றுக்கொள்வது அத்தியாவசியம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சீனாவின் Sinopharm தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்ட இலங்கை பணியாளர்களுக்கு கட்டார் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளன.

எனினும் இவர்கள் தமது நாட்டுக்கு வரவேண்டுமாயின் பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டு வருமாறு கட்டார் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்வதற்காக சுமார் 20,000 பேர் வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்துள்ளனர்.

இவர்களில் முதல் கட்டமாக சுமார் 8,000 பேருக்கே பைசர் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

ஏனையோருக்கும் வழங்குவதற்காக பைசர் தடுப்பூசியை பெற்றுத்தருமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு பணியகத்தின் பொதுமுகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார். 

Web Design by Srilanka Muslims Web Team