சுகாதாரமற்ற உணவு விநியோகம் கண்டுகொள்ளுமா சுகாதார அமைப்பு? - Sri Lanka Muslim

சுகாதாரமற்ற உணவு விநியோகம் கண்டுகொள்ளுமா சுகாதார அமைப்பு?

Contributors
author image

முஹம்மட் ஜெலீல், நிந்தவூர்

நாம் இன்று வெளி ஊர்களுக்கு சென்று திரும்பும்போது ஆசாசையாய் தமது குழந்தைகள்,உறவினர்களுக்கு ஏதாவது உணவுப்பொருட்கள் பழவகைகள் வாங்கிவந்து பகிர்ந்துண்னுவது வழக்கம், அந்தவகையில் அவ்வுணவு பொருட்கள் தரமானவையா ,தரமற்றவையா, சுத்தமானவையா, சுகாதாரமற்றவையா என்றெல்லாம் யாரும் பார்ப்பதுமில்லை கவனிப்பதுமில்லை.

 

நாம் உட்கொள்ளும் உணவு, நம் உடலை சுத்தமாக வைத்துக்கொள்ளும் முறை அனைத்தும் நம் உடலை ஆரோக்கியமாக பேணிக்காப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.

 

இன்று பெரும்பாலான நோய்கள் நாம் உண்ணும் உணவுவகை சுத்தயின்மை சுகாதாரகுறைபாடுகள் போன்றவெற்றினாலேதான் ஏற்படுகின்றதென்பது நாம் அனைவரும் நன்கறிந்த விடையம்.   

 

இதன் அடிப்படையில் இன்று காத்தான்குடி நகரில் அவதானிக்கப்பட்ட சில சுகாதாரமற்ற முறையில் பழக்கடைகளில் பழவகைகள் விநியேகம் செய்வதை மக்கள் பார்வைக்கு கொடுவருகின்றோம்.    

 

இன்று கிழக்கிலிருந்து மேற்கு நகருக்கு பஸ்களில் சென்றுவருபவர்கள் அதிகளவானோர் மட்டக்களப்பு, காத்தான்குடி வீதியின்னூடாகவே சென்று வருவதை வாடிக்கையாய் கொண்டுள்ளோம் அந்தவகையில் இன்று காத்தான்குடியினூடாக செல்லும் பயணிகளின் கண்களை கவரும் அளவுக்கு அங்கு பழக்கடைகள் வரிசையாக திறக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுவருகின்றது,

 

பயணிகள் தமது பஸ்களை நிறுத்தி தமக்கு தேவையான வகையில் பழவகைகளை கொள்வனவு செய்துகொள்கின்றார்கள் ஆனால்!! அது சுத்தமானவையா சுகாதரமானவையா என்றெல்லாம் பயணிகள் எவரும் கவனிப்பதில்லை. காரணம் நேரகுரைபாடு, அவசரம் மற்றும் தமது குழந்தைகளின் ஆசைக்கு ஏதாவது வாங்கிச்செல்லவேண்டுமென்ற நோக்கிலேயே கொள்வனவு செய்கின்றோமே தவிர, சுத்தம் சுகம்தரும் சுகாதாரம் உடலுக்கு நலவு என்றெல்லாம் நம் முன்னோர் சொன்ன அறிவுரையெல்லாம் எவரும் எற்றுக்கொள்வதில்லை.

 

மக்களாகிய நாம் இச் சிறிய சிறிய விடையங்களில்தான் அதிகம் கவனம் செலுத்தவேண்டும்.

 

காத்தான்குடி வீதி ஓரங்களில் தகர கொட்டில்களில் அமைந்திருக்கும் பழக்கடைகளில் சுகாதாரமற்ற முறையில் மக்களின் கண்களை விரைவில் கவரும் வகையில் அங்கு பழங்களை தரையில் கொட்டப்பட்ட நிலையிலும் வெளியில் தொங்கவிடப்பட்ட நிலையிலும் விற்பனை செய்வதை காணமுடிகின்றது.

 

இன்று ஆடை விப்பனை நிலையங்களில் மனிதன் அணியும் ஆடைகளை பாதுகாப்பான முறையில் குளிரூட்டப்பட்ட அறைகளிலும், கண்ணாடி பெட்டிகளிலும் வெய்க்கப்பட்டும் விற்பனை செய்யப்படுகின்றது.

 

ஆனால் இன்று மனிதன் உண்ணும் உணவுப்பொருட்களை தெருவில் போட்டு விற்பனை செய்யப்படுகின்றது இதை சற்று சிந்தித்துப்பாருங்கள்.

 

சுகாதார முறையில் பார்க்கும்பட்சத்தில் பக்டீரியாக்கள்,தொற்றுக்கிருமிகள் மிகவும் வேகமாக அணுகுவது பழவகைகளில்தான் அந்தவகையில் பழவகைகளை பாதுகாப்பாகவும் சுகாதார முறைகளில் வெய்கப்பட்டு விநியேகம் செய்வதே சிறந்தமுறையாகும்.

 

இன்று அரசாங்கத்தினாலும் பல தொண்டு நிறுவனங்களினாலும் சுகாதாரம் பற்றிய எத்தனையோ விழிப்புணர்வூட்டல்கள் மக்களுக்கு ஊட்டப்படுகின்றது ஆனால் மக்கள் இதை கருத்தில் கொள்வதில்லை.

 

இதுபோன்ற சுகாதரமற்ற முறை விநியோகங்கள் இங்கு மட்டுமல்ல நாட்டில் சகல இடங்களிலும் இதுபோன்ற தரமற்ற முறையே கையாளப்படுகின்றது

 

ஆகையால் சுகாதார அமைப்பு அதிகாரிகள் இதை உங்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டு இதற்குரிய சட்ட ஒழுங்கு முறைகளை பேணும் விதிமுறைகளை கொண்டுவருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

food

 

food.jpg2

 

food.jpg2.jpg3

 

Web Design by Srilanka Muslims Web Team