சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர் » Sri Lanka Muslim

சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்

Contributors

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களை தெரிவுசெய்யும் வேட்புமனுக் குழு இன்று கூடவுள்ளது.

இந்தக் கூட்டம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பினைக் கோரி இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

எவ்வாறாயினும், குறித்த இரண்டு மாகாணங்களிலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 25 வேட்பாளர்களை மாத்திரமே நிறுத்த முடியும் என கட்சியின் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளவர்களின் கல்வி பின்புலம், பிரபல்யம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனத்தில் கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இறுதி வேட்பாளர் தெரிவை எதிர்வரும் 27 ஆம் திகதி நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.(nf)


Web Design by Srilanka Muslims Web Team