"சுபீட்சத்தின் நோக்கு" வீதி நிர்மாணப் பணிகள் அக்கரைப்பற்று முதல்வர் தலைமையில் ஆரம்பித்து வைப்பு ! - Sri Lanka Muslim

“சுபீட்சத்தின் நோக்கு” வீதி நிர்மாணப் பணிகள் அக்கரைப்பற்று முதல்வர் தலைமையில் ஆரம்பித்து வைப்பு !

Contributors

மாளிகைக்காடு நிருபர்

அரசாங்கத்தின் “சுபீட்சத்தின் நோக்கு” கருப்பொருளுக்கமைய ஒரு இலட்சம் கிலோ மீட்டர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ், அக்கரைப்பற்று 20, 21 பொது வீதி நிர்மாணப் பணிகள் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகியின் தலைமையில் இன்று (22) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர்களான அக்கரைபற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் எஸ்.எம்.சபீஸ், எம்.ஐ.சஹாப்தீன், மாநகர சபையின் பிரதம பொறியியலாளர் ஜே.ஆகில், வீதி அபிவிருத்தி அதிகார சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள்,சமூக நலன்விரும்பிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

Web Design by Srilanka Muslims Web Team