சுப்பர் முஸ்லிம், வன் உம்மா போன்ற அமைப்புக்களை தடை செய்து உறுப்பினர்களை கைது செய்ய நடவடிக்கை..! - Sri Lanka Muslim

சுப்பர் முஸ்லிம், வன் உம்மா போன்ற அமைப்புக்களை தடை செய்து உறுப்பினர்களை கைது செய்ய நடவடிக்கை..!

Contributors
author image

Editorial Team

ஸஹ்ரானுடைய வலையமைப்புக்கு நிகராக இலங்கைக்குள் செயல்படும் அடிப்படைவாத இயக்கங்களை அடையாளம் கண்டு அதன் முக்கியஸ்தர்களை கைது செய்ய தீவிரவாத தடுப்புப் பிரிவு மற்றும் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன் அடிப்படையில் சுப்பர் முஸ்லிம், வன் உம்மா, ஹிஸ்புத் தஹ்ரீர் மற்றும் முஜாஹிதீன் அல்ஹா ஆகிய அமைப்புகளை தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சற்று முன் பாராளுமன்றில் அறிவித்தார்.

அதே போல் ஸஹ்ரான் பயங்கரவாத செயல்பாடுகளை முன்னெடுப்பதற்காக மதவச்சி, மல்வானை, லேவல்ல, ஹம்பாந்தோட்டை, நுவரெலியா, ஹிங்குல ஆகிய பகுதிகளில் செயல்பாடுகளுக்காக முன்னெடுக்கப்பட்ட 8 பயிற்சி நிலையங்கள் பற்றிய விபரங்களையும் அறிந்து கொள்ள முடிந்துள்ளது. ஸஹ்ரானின் பயங்கரவாத செயல்பாடுகளுக்கு முழுமையாக இப்றாஹீம் சகோதரர்களே செலவு செய்துள்ளதாகவும் அறிய வந்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team