'சுரகிமு கங்கா' திட்டம் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைப்பு - Sri Lanka Muslim

‘சுரகிமு கங்கா’ திட்டம் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைப்பு

Contributors

இலங்கையின் ஆறுகளை பாதுகாக்கும் தேசிய முயற்சியான ´சுரகிமு கங்கா´ திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கதிர்காமம் – மாணிக்க கங்கையில் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

சுற்றாடலின் முக்கிய அங்கமாகக் கருதப்படும் நீரின் தரத்தைப் பாதுகாப்பதன் மூலம் மக்களுக்கு தூய குடிநீரை வழங்குவதும் சுற்றாடல் மற்றும் உயிரியல் வளங்களைப் பாதுகாப்பதும் சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும்.

சுற்றாடல் அமைச்சும் மத்திய சுற்றாடல் அதிகார சபையும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன. முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்திற்காக வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆறுகளைப் பாதுகாக்கும் உலக தகவல் தொழில்நுட்ப இணையத் தளம் இன்று ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இந்த இணையத் தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் இந்த வேலைத்திட்டத்தின் முன்னேற்றம், ஆய்வின் தரவுகள், பிரதேசக் குழுக்களினால் வழங்கப்படும் செயற்றிட்டம் பற்றிய தகவல்கள் என்பவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team