சுரங்கப் பாதையில் ரயில் தடம்புரண்டு விபத்து - 36 பயணிகள் உயிரிழப்பு, 72 பேர் காயம் - Sri Lanka Muslim

சுரங்கப் பாதையில் ரயில் தடம்புரண்டு விபத்து – 36 பயணிகள் உயிரிழப்பு, 72 பேர் காயம்

Contributors

தாய்வானில் சரியாக பார்க்கிங் செய்யப்படாத லொரி தண்டவாளத்தில் விழுந்ததால் அதன்மீது மோதிய ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

தாய்வானின் தாய்டங் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில், ஹூவாலியன் அருகே உள்ள ஒரு சுரங்கப் பாதையை நெருங்கியபோது விபத்தில் சிக்கியது.

திடீரென தடம்புரண்ட ரயில், சுரங்கப் பாதையின் பக்கவாட்டு சுவரில் மோதியபடி சிறிது உள்ளே தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நின்றது.

இதனால் ரயில் பெட்டிகள் கடுமையாக சேதமடைந்தன. உள்ளே இருந்த பயணிகள் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் கூக்குரலிட்டனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்ததாகவும், 72 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது.

தடம்புரண்ட ரயிலுக்கு அருகில் லொரியின் சிதைந்த பாகங்கள் கிடந்தன. சரியாக பார்க்கிங் செய்யப்படாத லொரி சரிந்து தண்டவாளத்தில் விழுந்திருப்பதாகவும், அந்த லொரி மீது மோதியதால் ரயில் தடம்புரண்டிருக்கலாம் எனவும் ரயில்வே நிர்வாகம் கூறி உள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team