சுலோவீனியாவில் முதல் பள்ளிவாசல் – கட்டட வேலைகள் ஆரம்பம் - Sri Lanka Muslim

சுலோவீனியாவில் முதல் பள்ளிவாசல் – கட்டட வேலைகள் ஆரம்பம்

Contributors

கிழக்கு ஐரோப்பிய நாடான சுலோவீனியாவில் 20 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். பெரும்பான்மையினர் கத்தோலிக்க கிறித்தவர்கள். முஸ்லிம்கள் சுமார் 47 ஆயிரம்பேர் உள்ளனர். இதன் தலைநகர் லியுப்லியானா. இதுதான் அந்நாட்டின் பெரிய நகரம்.

இங்குள்ள முஸ்லிம்கள் தலைநகரில் 2016இல் திறக்கப்பட உள்ள முதல் பள்ளிவாசலின் கட்டட வேலையை இம்மாதம் (நவம்பர்-2013) தொடங்கியுள்ளனர்.  இப்பள்ளிவாசல் தொழுமிடம், கலாசார மையம், நூலகம், வகுப்பறைகள் ஆகியவை கொண்ட பன்னோக்கு இல்லமாகச் செயல்படவுள்ளது.  இப்பள்ளிவாசலுக்கு சுலோவீனியக் குடியரசு தலைவி எலைங்கா பிராடோஸ்க் அடிக்கல் நாட்டினார்.

தலைநகர் மேயர் சோரான் யான்கோவிச் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கத்தர் நாட்டின் வக்ஃப் அமைச்சர் ஃகைஸ் பின் முபாரக் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். 1916இல் வடமேற்கு சுலோவீனியாவில் கட்டப்பட்டிருந்த முதல் பள்ளிவாசல் முதலாம் உலகப் போருக்குப்பின் இடித்துத் தள்ளப்பட்டது.

இந்நாட்டு முஸ்லிம்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் இந்த இறையில்லம் 12 மில்லியன் யூரோ (15.9 மில்லியன் டாலர்) செலவில் எழுப்பப்பட உள்ளது. இதில் 70 விழுக்காடு தொகை கத்தரிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team