சுவர்ணமஹால் முன்னாள் பணிப்பாளர்கள் விளக்கமறியலில். - Sri Lanka Muslim

சுவர்ணமஹால் முன்னாள் பணிப்பாளர்கள் விளக்கமறியலில்.

Contributors

சுவர்ணமஹால் ஜுவலர்ஸ் தனியார் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, அஞ்சலி எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க மற்றும் நாலக எதிரிசிங்க ஆகியோர் ஏப்ரல் 1 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (17) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுவர்ணமஹால் ஜுவலர்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களான நாலக எதிரிசிங்க, ஜீவக எதிரிசிங்க, அஞ்சலி எதிரிசிங்க மற்றும் அசங்க எதிரிசிங்க ஆகியோர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் நேற்று (16) கைது செய்யப்பட்டனர்.

சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு வழங்கியிருந்த அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் சுவர்ணமஹால் நிறுவனத்தில் நிதி கையாடல் மோசடி தொடர்பில் இவர்கள் நால்வரும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team