சுவீடன் பள்ளி வாசல் மீது பன்றி இறைச்சித் தாக்குதல் - Sri Lanka Muslim

சுவீடன் பள்ளி வாசல் மீது பன்றி இறைச்சித் தாக்குதல்

Contributors

 

சுவீடன் நாட்டின் பிட்ஜா மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு கடந்த வாரம் பன்றி இறைச்சித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்தோடு அப்பள்ளியின் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

காலை 11 மணிக்கு பள்ளிவாசல் வந்த ஒருவர் பள்ளிக்குள் பன்றி இறைச்சி கிடப்பதையும் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதையும் கண்டு பொலிசிக்கு அறிவித்துள்ளார்.

இச்சம்பவத்தை இனவாதத்தை தூண்டும் ஒன்றாகவே பார்க்கவேண்டியுள்ளது என சுவீடன் பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இனக்கலவரத்தை மேற்கொள்வதற்கான சதித்திட்டங்கள் உள்ளனவா என்று பொலிசார் விசாரனை செய்து வருகின்றனர்.

இப்பள்ளி 2007ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. பிட்ஜா மாவட்டத்தில் ஒலிபெருக்கிகள் மூலம் அதான் சொல்லுவதற்கு அனுமதிக்கப்ட்ட ஒரே ஒரு பள்ளிவாசல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சுவீடனில் 90இலட்சம் மக்களில் 5 இலட்சம் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team