சூடு பிடித்துள்ள கொழும்பு அரசியல் களம் -நாளை நாடு திரும்புகிறார் பஸில்..! - Sri Lanka Muslim

சூடு பிடித்துள்ள கொழும்பு அரசியல் களம் -நாளை நாடு திரும்புகிறார் பஸில்..!

Contributors

 அமெரிக்காவுக்கு தனிப்பட்ட விஜயமாக சென்ற பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் பொருளாதார பணிக்குழுவின் தலைவருமான பசில் ராஜபக்ஷ, நாளை (23) இலங்கைக்கு திரும்பவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

திடீரென அமெரிக்காவுக்கு பஸில் சென்ற நிலையில் இலங்கையில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி அரசாங்கம் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.

குறிப்பாக கொரோனா தொற்று கட்டுக்கடங்காமை, பேர்ள் கப்பல் தீப்பற்றி மூழ்கியமை, எரிபொருள் விலையேற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடி என அரசாங்கம் கடும் சிக்கலை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் பஸில் நாடு திரும்பியதும் தற்போது மகிந்த வசம் உள்ள நிதியமைச்சை பொறுப்பேற்பார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

எனவே நாளையதினம் பஸில் நாடு திரும்பியதும் அரசாங்கத்தின் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பாரா என்ற எதிர்பார்ப்பு தென்னிலங்கையில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Web Design by Srilanka Muslims Web Team