சூதாட்டங்களை நடாத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அனுமதியளிக்கவில்லை - Sri Lanka Muslim

சூதாட்டங்களை நடாத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அனுமதியளிக்கவில்லை

Contributors

சூதாட்டங்களை நடாத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அனுமதியளிக்கவில்லை என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தலைநகரில் முறையற்ற விதத்தில் காணப்படும் சூதாட்ட மையங்கள் ஒழுங்கமைக்கப்பட உள்ளன. இதன்படி, இதுவரையில் இயங்கி வந்த சூதாட்ட மையங்கள் மூடப்படவுள்ளன. அதற்கு பதிலாக புதிய சூதாட்ட மையங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

இந்த சூதாட்ட மையங்களில் ஒன்றை அவுஸ்திரேலிய சூதாட்ட வர்த்தகர் ஜேம்ஸ் பார்கர் குத்தகை அடிப்படையில் நடாத்த உள்ளார். அரசாங்கம் புதிதாக எந்தவொரு சூதாட்ட மையத்தையும் திறக்க அனுமதியளிக்கவில்லை.

தலைநகரில் சன நெரிசல் மிக்க இடங்களிலிருந்து சூதாட்ட மையங்கள் அகற்றப்பட்டு, ஒதுக்குபுறமாக சூதாட்ட மையங்கள் அமைக்கவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team