சூழ்ச்சிகளாலும் துரோகத்தாலும் தோற்றுப்போன வடமாகாணசபை » Sri Lanka Muslim

சூழ்ச்சிகளாலும் துரோகத்தாலும் தோற்றுப்போன வடமாகாணசபை

cv wickneswaran

Contributors
author image

Fahmy Mohideen

உலகம் வேகமாக சுற்றுகிறது. அதேநேரம் தண்டனையும் வேகமாக கிடைக்கிறது. இந்தியாவின் கைப்பிள்ளையாகி சம்பந்தன், சுரேஸ்பிரேமசந்திரன் மூலம் விக்னேஸ்வரன் கொழும்பிலிருந்து இறக்குமதியாகி முதலமைச்சரானார்.

கடந்த பொதுத் தேர்தலில் சுரேஸ்பிரேமசந்திர தோல்விகண்டதும் சுமேந்திரன் இந்தியாவின் கைப்பிள்ளையானார். ரணிலின் சகல நிகழ்ச்சி நிரலுக்கும் அதிகாரமற்ற முகவராக மாறினர்.
இதனால் ஹகீம் மற்றும் ரிசாத்துக்கு திட்டமிட்டு முஸ்லீம்களின் புனர்வாழ்வு,மீளகுடியேற்றம் மற்றம் வேளைவாய்ப்புடன் தொடர்புடைய அமைச்சு வாக்குறுதி வழங்கியும் ரணிலை வழங்கமுடியாமல் தடுத்தார்.

சுவாமிநாதனுக்கு பொறுத்தமான அமைச்சை வழங்கவைத்து TNA பின்கதவால் நின்று முழு அமைச்சையும் வடக்கிற்கு செயற்படுத்தியது.சுவாமிநாதனின் அமைச்சை செயற்படுத்துவது சுமேந்திரனும் சம்பந்தரும் தான்.
வடமாகாண முஸ்லீம்களின் மீள்குடியேற்றத்துக்கான செயலனி ஒன்றை முஸ்லீம் மக்களை திருப்திப்படுத்த மைதிரி உருவாக்கினார்.ஆனால் வருடங்கள் கடந்தும் ஒரு கல்லைக்கூட அசைக்க முடியாமல் வடமாகாணசபை மூலம் தடுக்கப்பட்டது.
வடமாகணத்தில் முஸ்லீம் மீள்குடியேறுவதைத் தடுக்க முஸ்லீம்கள் காடுகளை அழித்துவிட்டார்கள் என்ற கோசத்தை சிங்கள் மக்களிடம் எழுப்பினர்.இதற்கான ஆதாரங்களும் ஆவணங்களும் இருந்தும் அர்த்தமற்ற ரீதியில் தடைகளை ஏற்படுத்தினர்.மேலும் அமைச்சர் றிசாத் தனிப்பட்ட வாழ்க்கையில் ஊழல்வாதியாக இருக்கலாம்.ஆனால் அவரை விமர்சிப்பதன் மூலமும், அவருக்கு எதிராக செயற்பட்டதன் மூலமும் முஸ்லீம்களை நிரந்தரமாக வடமாகாணத்தில் குடியேறுவதைத் தடுத்தனர்.

இந்தியாவுடன் பல ஒப்பந்தங்களையும் உறவுகளையும் ஏற்படுத்த உதவினார்.இந்தியா வடமாகாணத்துக்கான உதவிதூதுவராலயத்தின் மூலம் தனது இந்துசமுத்திரத்தின் உளவுபார்க்கும் நிகழ்ச்சியில் வெற்றிகண்டது.இலங்கையில் நல்லாட்சி மலர்ந்து ஆக்கமான செயற்பாடுகள் ஆரம்பமானது.சீனாவுடன் தொடர்புகளை துண்டித்து இலங்கையை பொருளாதார அடிமையாக வைத்திருக்கும் இந்தியாவின் இலக்கிற்கு வடமாகாணசபை பேருதவியாக இருந்தது.மறுபுறம் தமிழ்தலமைகளையும் மக்களையும் பிரித்து வைத்திருப்பதன் மூலமே இலங்கை அரசாங்கத்திடம் எப்போதும் ஆதிக்கமுள்ள சக்தியாக இருக்கமுடியும்.இதனை இந்திய உளவுப்பிரிவு சமாந்தரபோக்கில் கையாண்டது.

TNA வை அரசாங்கத்துடன் இணைத்து தமிழ்மக்களை அரசாங்கத்துக்கு எதிராகவே வைத்திருந்தது.
இதற்காக வடக்கில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களும் மக்கள் எழிரச்சிப் போராட்டங்களும்.
அரசியல்ரீதியாக தமிழ் தேசிய முன்னனி எனற பெயரில் கஜேந்திரன் குழுவினர்,சிவாஜிலிங்கம் குழு,ஆனந்தி சசீதரன் குழு,முன்னால் போராளிகள் குழு என்பவற்றை உருவாக்கியது.இவைகள் மூலம் விக்னேஸ்வரனை TNA யுடன் சுறிப்பாக தழிழரசுக் கட்சியுடன் முரண்பட வைத்தது.
அடுத்த கட்டமாக தமிழ்மக்கள் பேரவை என்ற அமைப்பை அதிகாரப்பகிர்விற்கு மட்டுமான அமைப்பாக உருவாக்கியது.பின்னர் இந்த அமைப்பை வடகிழக்கு இணைப்பு போராட்டம் என்ற கதையை உருவாக்கி வடகிழக்கு முழுவதும் TNA கட்சிக்கு எதிரான சக்தியாக மாற்றுவதற்கு முயற்சித்தது.

இதன் மூலம் வடமாகாணசபையில் உட்கட்சிப் பூசலை உருவாக்கியது.கடந்த இந்தியப்பிரதமர்,வெளிவிவகார அமைச்சர் போன்றவர்களில் தொடர் விஜயங்களால் பிரதமருக்கான இந்திய ஆலோசகர் உத்தியோகப்பற்றற்ற முறையில் அண்மையில் நியமனமானர்.
இந்த நிலையில் வடமாகாண முதலமைச்சருக்கும் TNA இற்குமிடையிலான விரிசல் அதிகரித்தது.

குறிப்பாக மாவை,சம்பந்தர் மற்றும் சுமந்திரனுக்கு என்று வரிசையாக அடுத்த தமிழ்தேசியத்தின் தலைவர்களாக காத்திருப்பவர்களுக்கு மக்கள் அதிருப்தி மேலோங்கியது.
ஆகவே வடமாகாண முதலமைச்சரை பதவி இறக்க வேண்டிய சதிவலை ஆரம்பமானது.இதற்காக அமைச்சர்களின் ஊழல் என்ற நாடகத்தை உருவாக்கி முதலமைச்சரை திக்குமுக்காட வைத்தனர்.
இதற்காக முதலமைச்சருக்கு சக்தி ஊடகத்தின் மூலம் மக்கள் அழுத்தத்தை ஏற்படுத்தி விசாரணையை முடித்தனர்.இதன்மூலம் தனது அமைச்சர்களுக்கு எதிராக முதலமைச்சரையும்,,முதலமைச்சருக்கு எதிராக வடமாகாண உறுப்பினர்களையும் மோதவிட்டனர்.
இந்த மோதலில் முதலமைச்சரை நியாயமான அரசியல்வாதியாக அதேசக்தி ஊடகம் மூலம் தூண்டிவிட்டனர்.அத்துடன் முதலமைச்சருக்கு சார்பாக வடமாகாண மக்களையும் தூண்டிவிட்டனர்.மேலும் தமிழ் தலமைகளுக்கு 100% வாக்களித்த வடமாகாண மக்களை இன்று அவர்களுக்கு எதிராக கோஷமிடும் நிலைக்கு இந்திய உளவுத்துறை கொண்டுவந்துள்ளது.

தற்போது அரசாங்கம் அதிகார பகிர்வு,அரசியலமைப்பு மற்றும் சர்வதேச வாக்குறிகளை நிறைவேற்றும் நிலையில் இல்லை.அதேநேரம் வடமாகாண சபையும் இதர அமைப்புகளும் அரசுக்கு சவாலாக மாறிவருகிறது.அதாவது கடந்த ஐ நா சபையில் மேலும் இரண்டூவருடம் இலங்கைக்கு வழங்கப்பட்டதை தமிழரசுக் கட்சியைத் தவிர சகல தரப்பும் எதிர்க்கிறது.அரசாங்கமோ இன்னும் பலவருடங்களுக்கு இதனை இழுத்தடிக்க தீர்மானித்துள்ளது.

ஆதலால் தமிழ் தலமைகளிடயே கருத்து மோதல்களையும், நிச்சயற்ற தன்மையையும் உருவாக்க அரசாங்கம் ஆடிய ஆட்டமே தற்போதைய வடமாகாணசபையில் வெடித்து சிதறியது.

விடுதலைப் புலிகளை உருவாக்கி பாலூட்டி வளரத்த இந்தியா,,இறுதியில் அந்த அமைப்பை அத்திவாரத்துடன் அழிக்க இலங்கை அரசுக்கு உதவியது.

அதேநேரம் வடமாகாண மற்றும் கிழக்கு முஸ்லீம்களை நசுக்குவதற்காக உருவாக்கி வளர்த்த வடமாகாணத்தையும் தமிழ்தலமைகளையும் சிங்கள அரசின் அதிகாரத்திற்குள் அடங்க வைத்துள்ளது.

உண்மையில் யதார்த்தம் என்னவென்றால் இந்திய உளவுப்பிரிவின் பொறிக்குள் சிக்கியவர்கள் மீண்டதாக வரலாறு கிடையாது.தமக்குத் தேவையானவரை உபயோகிப்பதும் தமக்கு தேவைவரும் போது அழித்துவிடுவதில் இந்தியா மிகவும் பக்குவமாக உள்நாட்டிலும் அயல்நாடுகளிலும் கரகாட்டம் ஆடுகிறது.

அன்று ஆயுதம்தாங்கி சர்வதேச அளவில் சக்திமிக்க விடுதலைப்புலிகளை பலத்தை கருணாவை வைத்து வேருடன் அழித்த ரணில்,
இன்று அரசியல் ரீதியில் பலமிக்க தமிழ்தலமைகளை சுமேந்திரன் போன்றவல்களை வைத்து தடுமாற வைத்துள்ளார்.

 

Web Design by The Design Lanka