செக்ஸ் படம் பார்ப்போம் : அரசு ஊழியர்களின் அட்டகாசம் - Sri Lanka Muslim

செக்ஸ் படம் பார்ப்போம் : அரசு ஊழியர்களின் அட்டகாசம்

Contributors

கர்நாடக அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தின் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தங்களது அலுவலக கணனி மூலம் ஆபாச படங்களை கண்டு ரசிப்பதாக சி.பி.ஐ. ரகசிய பொலிசாருக்கு தகவல் தெரியவந்துள்ளது.

 

கர்நாடக அரசின் தலைமை செயலகத்தில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள் கோப்புகளை ஆய்வு செய்யும் பணிகளை மறந்து விட்டு, இந்த ஆபாச வலைத்தளங்களே கதியாக கிடக்கின்றனர் என்பதை கண்டுபிடித்த சி.பி.ஐ., இது தொடர்பாக கர்நாடக மாநில தலைமை செயலாளருக்கு ரகசிய தகவல் அனுப்பியுள்ளது.

 

இதனையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் அரசின் இணைய இணைப்பின் வாயிலாகமேற்கண்ட வலைத்தளங்களுக்குள் நுழைவதை தடை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

ஆனாலும் அலுவலக கணனிகளின் வழியாக பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அரசு ஊழியர்கள் அரட்டை அடித்து பொழுதை கழிக்க தொடங்கினார்கள்.

 

இதுவும் தலைமை செயலாளரின் கவனத்துக்கு சென்றதால் பேஸ்புக், டுவிட்டர் மற்றும் இணையதள ஷாப்பிங் ஆகியவற்றுக்குள் நுழைய முடியாதபடி ‘ஃபயர் வால் (தடுப்பு சுவர்) மென்பொருளை கர்நாடக அரசுக்கு சொந்தமான கணனிகளில் பொருத்த அரசு உத்தரவிட்டது.

Web Design by Srilanka Muslims Web Team