சென்னையில் ”பாம்புகள் குளிக்கும் நதி” ! பொத்துவில் அஸ்மின் , ஜனுாஸ் ஆகியோருக்கு கௌரவம் - Sri Lanka Muslim

சென்னையில் ”பாம்புகள் குளிக்கும் நதி” ! பொத்துவில் அஸ்மின் , ஜனுாஸ் ஆகியோருக்கு கௌரவம்

Contributors

கவிஞர் பொத்துவில் அஸ்மினால் அண்மையில் கொழும்பில் வெளியிடப்பட்ட ”பாம்புகள் குளிக்கும் நதி” கவிதை நுால் அறிமுக விழாவும் ஈழத்துக் கவிஞர்கள் கௌரவிப்பும் நாளை மறுதினம்(8) சென்னை கே.நகர் டிஸ்கவரி புத்தக இல்லத்தில் நடைபெறவுள்ளது.
இந்தியாவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரும் மதுரா ரவல்ஸ் உரிமையாளருமான வீ்கே.ரீ.பாலன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வினை அறிவிப்பாளரும் குறுந்திரைப்பட இயக்குனரும் கவிஞருமான மாளிகைக் காடு எஸ்.ஜனுாஸ் தொகுத்து வழங்குகிறார்.
கவிஞர் பிறை சூடன், சேரன் உள்ளிட்ட கலைத்துறைப் பிரபல்யங்கள் இந்நிகழ்வில் பங்கேற்கவுள்னர்.
இப் பெருவிழாவில் எமது மண்ணின் கலைஞர்களான பொத்துவில் அஸ்மின் , ஜனுாஸ் ஆகியோர் கௌரவிக்கப்படவுள்ளனர்.
இந்நிகழ்வை அடுத்து ஜனுாஸ் இந்திய கலைஞர்கள் பலருடன் ஊடக நிகழை்ச்சிகளுக்கான சந்திப்புக்களையும் மேற்கொள்ளவுள்ளார்.(alish)

 

Web Design by Srilanka Muslims Web Team