செய்தியாளர் மாநாட்டிற்கு உள்ளாடையை கொண்டு வந்து அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார் அசேல சம்பத்..! - Sri Lanka Muslim

செய்தியாளர் மாநாட்டிற்கு உள்ளாடையை கொண்டு வந்து அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார் அசேல சம்பத்..!

Contributors

கைப்பற்றப்பட்ட 54000 கிலோகிராம் வெள்ளைப்பூண்டினை சந்தைக்கு கொண்டுவந்து விற்பனை செய்துள்ளனர் என நுகர்வோர் பாதுகாப்பு செயற்பாட்டாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் மாநாட்டிற்கு உள்ளாடையொன்றை கொண்டுவந்த அவர் பமுனுவவில் தயாரிக்கப்படும் உள்ளாடைகளையே தாங்கள் அணிவதாக பந்துல தெரிவிக்கின்றார், துணிச்சலிருந்தால் நீங்கள் அங்கு தயாரிக்கப்படும் உள்ளாடைகளையே அணிகின்றீர்கள் என்பதை நிருபிப்பதற்காக உங்கள் உள்ளாடைகளை காண்பியுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சீனியின் தரத்தில் தற்போது பெரும் பிரச்சினை எழுந்துள்ளது, புறக்கோட்டையில் உள்ள சீனியின் தரத்தில் பிரச்சினை உள்ளது என நான் உறுதியுடன் தெரிவிக்கின்றேன் என அசேலசம்பத் தெரிவித்துள்ளார்.
துணிவிருந்தால் அப்படி இல்லை என தெரிவியுங்கள்,இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்து வழக்கு தாக்கல் செய்யுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றொரு கடையில் விற்கப்படுவதற்கான ஆதாரங்களை என்னால் சமர்ப்பிக்க முடியும்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team