செய்தி இணைய தளங்கள் முடக்கப்பட்டு வருவதாக தொழில்சார் இணைய ஊடகவியலாளர் பேரவை குற்றச்சாட்டு - Sri Lanka Muslim

செய்தி இணைய தளங்கள் முடக்கப்பட்டு வருவதாக தொழில்சார் இணைய ஊடகவியலாளர் பேரவை குற்றச்சாட்டு

Contributors

தெரிவு செய்யப்பட்ட செய்தி இணைய தளங்கள் மட்டும் முடக்கப்பட்டு வருவதாக தொழில்சார் இணைய ஊடகவியலாளர் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது. இணைய செய்திகளை முடக்கும் நோக்கில் இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில்இணைய தளங்கள் முடக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காமிரர் இணைய தளம் இலங்கையில் முடக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் அழைப்பாளர் பெரடி கமகே தெரிவித்துள்ளார்.

தமிழ்நெற், ஸ்ரீலங்கா கார்டியன், லங்கா ஈ நியூஸ் போன்ற இணைய தளங்கள் திட்டமிட்ட அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். ஸ்ரீலங்கா மிரர் ஊடகத்தின் மீது தொடர்ச்சியாக அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

ஊடக அமைச்சின் அனுமதியைப் பெற்றுக்கொண்ட இணைய தளங்களில் ஸ்ரீலங்கா மிரரும் ஒன்று என அவர் தெரிவித்துள்ளார். இணைய ஊடகங்கள் பல்வேறு சமூக சீரழிவுகளை அம்பலப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவியை வகிக்கும் இலங்கை, அந்த அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகளுக்கு அமைய தகவல் அறிந்து கொள்ளும் கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்யவும் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.-GTN

Web Design by Srilanka Muslims Web Team