செல்பிகளுக்குள் சிக்கி சிதைந்து போன அமல்கள் - கவிதை » Sri Lanka Muslim

செல்பிகளுக்குள் சிக்கி சிதைந்து போன அமல்கள் – கவிதை

is9

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


செல்பிகளுக்குள்
சிக்கி
சிதைந்து போனது
செய்த அமல்களின்
இஹ்லாஸ்

அடுத்தவரின் குறையை
அவசரமாய் செயார் செய்ததில்
அரையுயிராய் கிடக்கிறது
அஹ்லாக் எனும் நற்குணம்.

ப’டச்’சவனை தஸ்பீஹ் செய்ய
பயன் படுத்திய விரல்கள்
டச் போனில் தவழ்ந்தே
டயர்டாகிப் போகின.

பேக் ஐடி கொண்ட
போக்கிரிகள் சிலரால்
புறம் பேசல் என்பது
உரம் பெற்று வளர்கிறது.

இன்பொக்ஸில் செய்த
இரகசிய பாவங்கள்
ஸ்டொக்கில் இருக்கின்றன
27 தவ்பாவுக்காய்.

அடுத்தவர் இயக்கத்தை
அவதூறாய் விமர்சித்தே
நடுத்தெருவில் நிற்கிறது
நம்மவரின் ஒற்றுமை.

மணிக்கணக்கில் சற் செய்தே
மரணித்துப் போனது
தனைச் சுற்றி உள்ளோரின்
தனிப்பட்ட நேசங்கள்

இருகைகள் ஏந்தி
இறைஞ்ச வேண்டிய துஆக்கள்
ஒருகையால் டைப் செய்து
வெறுமையாய் ஆகின.

ஒரு நாள் வரும்
உள் மூச்சு நிற்கும்
அன்றொய்டும் ஐபோணும்
அடுத்தவர்க்கு கைமாறும்
அன்று புரியவரும்
ஆத்மாவின் activity log…..,!

Web Design by The Design Lanka