சைகை மூலம் இயங்கும் ஸ்மார்ட்போன் : நார்வே நிறுவனம் அறிமுகம்! » Sri Lanka Muslim

சைகை மூலம் இயங்கும் ஸ்மார்ட்போன் : நார்வே நிறுவனம் அறிமுகம்!

jjhj

Contributors

பொத்தான்கள் மூலம் இயக்கப்பட்டு வந்த செல்போன்களின் இடத்தை தற்போது தொடுதிரை போன்கள் பிடித்துள்ளன. இதன் அடுத்த பரிமாண வளர்ச்சியாக வர இருப்பது சைகை மூலம் செயல்படும் ஃபோன்கள்.

இதற்கு அல்ட்ரா சவுண்ட் (Ultra Sound) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நார்வேயைச் சேர்ந்த நிறுவனம் திட்டுள்ளது. இதன் மூலம் செல்போன்கள், டேப்லெட்கள் போன்ற கருவிகளை சைகை மூலமாக இயக்க முடியும். அடுத்த ஆண்டுக்குள் இந்த தொழில்நுட்பத்தில் இயங்கும் செல்போன்கள் மற்றும் டேப்லெட்கள் சந்தைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள கேலக்ஸி எஸ்-4 ஸ்மார்ட்போனில் சைகை மூலம் இயக்கும் வசதி உள்ளது. அகச்சிவப்பு கதிர்கள் மூலம் செயல்படும் இந்த வசதி மிகக் குறைந்த பரப்பில் மட்டுமே செயல்படும். அல்ட்ரா சவுண்ட் (Ultra Sound) தொழில்நுட்பம் மூலம் இதில் பயன்படுத்தப்பட்டால் சைகை மூலம் ஸ்மார்ட்போன்களை இயக்கும் வசதி மிகவும் பிரபலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Web Design by The Design Lanka