சொதப்பாமல் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதில் முஸ்லிம்களின் மனநிலைக்கு ஏற்ப முடிவெடுங்கள் - Sri Lanka Muslim

சொதப்பாமல் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதில் முஸ்லிம்களின் மனநிலைக்கு ஏற்ப முடிவெடுங்கள்

Contributors
author image

JAWAHIR SALY

இத்தேர்தலில் சிறுபான்மை சமூகங்கள் அரசாங்கத்தை நிராகரித்துள்ளதாக நீங்கள் கூறுகிறீர்கள், ஆனால் உங்களது கட்சி மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களோ ஊவா தமிழ் மக்களே ஆட்சியை தீர்மானித்ததாக அறிக்கை விட்டுள்ளார்.

 

 தலைவரோ முதன் முதலாக ஏமாற்று தோல்வியடைந்த அதிர்ச்சியில் தவிசாளரைப்போல யாருக்கும் புரியாத அறிக்கைகளை விடுகிறார்.

 

ஒன்று மட்டும் உண்மை, 75சதவீத சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறவேண்டும் என்ற நோக்கில் சிறுபான்மை மக்கள் மனங்களை காயப்படுத்திய அரசுக்கு சிங்கள மக்கள் 55சத வீதத்திற்கு குறைவான வாக்குகளையே அளித்துள்ளார்கள்.

 

 

அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் முஸ்லிம்களின் வாக்குகளைத் திருப்ப வேண்டிய வேலைத்திட்டத்தை மூன்று முஸ்லிம் கட்சிகளினூடாகவும் செய்ய வைக்கும், ஆனால் அது சாத்தியப்படாது என்பதை நன்றாக உணர்ந்துள்ள உங்களைப்போன்ற உயர்பீட உறுப்பினர்கள் இம்முறையும் வழமைபோல் இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பை தலைவருக்கு விட்டுச் சொதப்பாமல் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதில் முஸ்லிம்களின் மனநிலைக்கு ஏற்ப முடிவெடுங்கள், அப்போதுதான் மறைந்த தலைவரை எப்போது்ம் மக்கள் நினைவுறுத்துவது போல உங்களையும் பேசுவார்கள்

Web Design by Srilanka Muslims Web Team