சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை - Sri Lanka Muslim

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை

Contributors
author image

World News Editorial Team

வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. தமிழக முதல்- அமைச்சராக ஜெயலலிதா பதவி வகித்தபோது கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடிக்கு சொத்து சேர்த்ததாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

 

சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். முதலில் இந்த வழக்கு விசாரணையை சென்னையில் அமைக்கப்பட்ட தனிக்கோர்ட்டு விசாரித்து வந்தது. பின்னர் கடந்த 2003-ம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை கர்நாடக மாநிலத்துக்கு மாற்றப்பட்டது.

 

18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கின் இறுதிக்கட்ட வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதாக சிறப்பு நீதிபதி குன்ஹா அறிவித்தார்.

 

இவ்வழக்கில் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

 

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா  தலா 10 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

– See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=7078#sthash.UiJL0sIs.dpuf

இவ்வழக்கில் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா  தலா 10 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

 

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா  தலா 10 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

– See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=7078#sthash.UiJL0sIs.dpuf

 

ரூ.56 கோடிக்கு கணக்கு இல்லை

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் ரூ. 66.65 கோடிக்கு சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இதில் ரூ.9.95 கோடி சொத்துக்கு மட்டுமே கணக்கு காட்டப்பட்டதாகவும், மீதம் உள்ள ரூ.56.70 கோடி சொத்துக்கு கணக்கு இல்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

 

ஜெயலலிதாவுக்கு நெஞ்சுவலி: பெங்களூர் சிறைச்சாலை மருத்துவமனையில் பரிசோதனை

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாயும், மற்றவர்களுக்கு தலா 10 கோடி ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால் கூடுதலாக ஒரு வருடம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

 

பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பையடுத்து 4 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

அப்போது ஜெயலலிதா தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும், மயக்கம் வருவதாகவும் கூறினார். இதையடுத்து அவருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

Web Design by Srilanka Muslims Web Team