சௌதி ,கத்தாரில் பெய்த அடை மழை - Sri Lanka Muslim
Contributors
author image

BBC

கத்தாரில் ஒரு ஆண்டு முழுதும் பெய்யும் மழை ஒரு சில மணி நேரங்களில் கொட்டித் தீர்த்ததை அடுத்து நாடே ஏறக்குறைய ஸ்தம்பித நிலைக்கு வந்தது.

Image copyrightAFP
Image captionசைக்கிளை ஓட்ட முடியவில்லையே ! கத்தார் மழையில் சிறுவன்

கடந்த ஆண்டுதான் திறக்கப்பட்ட ஹமாத் சர்வதேச விமான நிலையத்தின் கூரையினூடாக தண்ணீர் அருவி போல வழிந்தது.

விமான நிலையக் கட்டுமானத்தின் தரம் குறித்து பிரதமர் விசாரணை ஒன்றுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இந்த விமான நிலையம், 2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுவதற்கு முன்னர் நடத்தி முடிக்கப்பட்ட கட்டிட வேலைகளில் ஒன்றாகும்.

Image copyrightAFP
Image captionகத்தார் சாலைகளில் மழை நீர்

அண்டை நாடான சௌதி அரேபியாவிலும் பெய்த மழையில், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. தலைநகர் ரியாத்தில் கார்கள் மழை நீரில் மூழ்கின.

Image copyrightReuters
Image captionசௌதியில் மழை ஏற்படுத்திய குழியில் கார்

கிழக்குப் பகுதி நகரான அல் ருமய்லாவில், மழை நீர் சாலையில் ஒன்பது மீட்ட அகலமுள்ள ஒரு படுகுழியை உருவாக்கி, ஒரு காரையே விழுங்கிவிட்டது.

காரில் பயணித்த இருவர் நீந்தி உயிர் தப்பினர்.

Web Design by Srilanka Muslims Web Team