ஜக்கிய சமூக முன்னனியின் செயற்திட்டங்கள் ஆரம்பமாகின !! - Sri Lanka Muslim

ஜக்கிய சமூக முன்னனியின் செயற்திட்டங்கள் ஆரம்பமாகின !!

Contributors

நூருள் ஹுதா உமர்.

ஜக்கிய சமூக முன்னணியின் செயற்திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக அது சம்பந்தமான கலந்துரையாடல் ஜக்கிய சமூக முன்னணியின் தலைவரும், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான அ.கபூர் அன்வர் தலைமையில் சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலின் போது இளைஞர் கழகங்களில் இருக்கின்ற இதுவரை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வழங்கப்படுகின்ற அடையாள அட்டை பெறாத இளைஞர் யுவதிகளுக்கு இலவசமாக அடையாள அட்டை பெற்றுக் கொடுத்தல், வறிய பாடசாலை 50 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணம் வழங்கள், முதற்கட்டமாக 50 இளைஞர் யுவதிகளுக்கு சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்துதல், எதிர்வரும் புனித நோன்பை முன்னிட்டு பள்ளிவாசல்களை சுத்தம் செய்தல், ஜனாசா குளிப்பாட்டல் விழிப்புணர்வு கருத்தரங்கை செய்தல் போன்ற வேலைத் திட்டங்களை எதிர்வரும் நாட்களில் தொடர்ச்சியாக செய்வது என தீர்மாணிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் முன்னணியின் செயலாளர் எம்.எஸ். இம்தியாஸ் மற்றும் முன்னணியின் அமைப்பாளரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய சம்மேளன பிரதிநிதியுமாகிய அஸ்லம் சிப்னாஸ் மற்றும் கிராம சேவக பிரிவுகளின் இணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team