ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட நான் தயார்? - சந்திரிக்கா » Sri Lanka Muslim

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட நான் தயார்? – சந்திரிக்கா

Contributors

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட தான் விருப்பத்துடன் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் ஏ.வி.சுரவீரவின் இறுதிக் கிரியைகள் மினுவங்கொட பொது மயானத்தில் நடைபெற்ற போது, அங்கு சென்றிருந்த சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியிடம் சந்திரிக்கா இதனை கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி உட்பட பல அமைச்சர்கள் இந்த இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்தனர்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி போட்டியிட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் அமைச்சர் பௌசி, சந்திரிக்காவிடம் வினவியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு எதிர்க்கட்சிகளிடம் இருந்து அழைப்பு கிடைத்துள்ளதாகவும் தான் அதனை நிராகரிக்கவில்லை எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 10 அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தால் போட்டியிடுவதாகவும் தெரிவித்துள்ளளார்.

தேர்தலில் போட்டியிட தனக்கு ஆதரவு வழங்கும் அந்த அமைச்சர்கள் அப்போது தன்னுடன் இணைந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் சந்திரிக்கா கூறியுள்ளார்.(jmrss)

 

ஐக்கிய தேசியக் கட்சி, சரத் பொன்சேகா, ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய தான் பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் எதிர்ப்புகளை கொண்டிருக்கவில்லை என்பதும் உறுதியாகி இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

 

Web Design by Srilanka Muslims Web Team