ஜனாதிபதியிடம் ஆறு தூதுவர்களிகளின் பெயர்ப் பட்டியல் - Sri Lanka Muslim

ஜனாதிபதியிடம் ஆறு தூதுவர்களிகளின் பெயர்ப் பட்டியல்

Contributors
author image

Editorial Team

புதிதாக நியமனம் பெற்ற ஆறு தூதுவர்கள் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்துள்ளனர்.

 

அதன்படி எஸ்தோனிய குடியரசின் தூதுவர் விலிஜர் லுபி, கொலம்பியாவின் தூதுவர் மோனிக்கா லன்ஸெட்டா முட்டிஸ், இஸ்ரேல் தூதுவர் டானியல் கார்மன், பல்கேரிய தூதுவர் பெட்கோ, கோலெவ் டோய்கொவ், வியட்நாம் தூதுவர் பன் கியோ தா எ மற்றும் லாவோஸ் தூதுவர் சௌதம் சகொன்னின்ஹொம் ஆகியோர் இவ்வாறு நியமனக் கடிதங்களை கையளித்துள்ளனர்.

 

வியட்நாம் தூதுவரைத் தவிர இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள ஏனைய தூதுவர்கள் இந்தியாவின் புதுடில்லியில் நிலைகொண்டிருப்பர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

இந்த நியமனக் கடிதம் கையளிக்கும் நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார செயலாளர் ஷேனுகா செனவிரட்ன ஆகியோர் கலந்து கொண்டனர். (ad)

Web Design by Srilanka Muslims Web Team