ஜனாதிபதியின் அக்கிராசன உரையை கிழித்து தொங்கவிட்ட விஜித்த ஹேரத்! - Sri Lanka Muslim

ஜனாதிபதியின் அக்கிராசன உரையை கிழித்து தொங்கவிட்ட விஜித்த ஹேரத்!

Contributors

ஜனாதிபதியின் அக்கிராசன உரையின் போது நடைமுறை பிரச்சினைகள் எதற்கும் தீர்வுகள் வழங்கப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (21) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

“ஜனாதிபதியின் அக்கிராசன உரையின் போது நடைமுறை பிரச்சினைகள் எதற்கும் தீர்வுகள் வழங்கப்படவில்லை. திருடி சாப்பிடுவது, கடனுக்கு சாப்பிடுவது மற்றும் விற்று சாப்பிடுவதே அரசாங்கத்தின் கொள்கை. தனது இரண்டாண்டு ஆட்சிக்காலத்தில் வெளிநாடுகளிடம் இருந்து கடனை பெறவில்லை என ஜனாதிபதி தனது சிம்மாசன உரையில் குறிப்பிட்டார். எனினும், கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியிலேயே அதிகளவில் கடன் பெறப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த கடன் 21 ட்ரில்லியன் ரூபாய். இதில் 8 ட்ரில்லியன் ரூபாய் கடன் கோட்டாபயவின் ஆட்சிக்காலத்திலேயே பெறப்பட்டுள்ளது.

தற்போது, சோறு வழங்கிய தந்தையாக சீனாவின் ஜனாதிபதி ஷீ ஜின்னை மக்கள் கூற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி, தமது உரையில், தமது அரசாங்கம் மனித உரிமைகளை மீறவில்லை என கூறியிருந்தார். எனினும், நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்தமையும், உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைத்ததையும் மனித உரிமை மீறல்களாகும்.

மகர சிறைச்சாலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த 11 பேர் சுட்டுக்கொல்லப்பட்டமை இந்த ஆட்சியின் போதே இடம்பெற்றது. சமூக ஊடகங்களில் கூறப்பட்ட விடயங்களுக்காக பலர் கைது செய்யப்பட்டமையும் மனித உரிமைகள் மீறலாகும்.

பொலிஸ் காவலில் உள்ளவர்களின் ஆயுதங்களை மீட்பதாக கூறி அழைத்து செல்லப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்களும் இந்த ஆட்சியில் இடம்பெற்றன.

இந்த நிலையில், பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை செய்யப்பபோவதாக கூறுவதும், வடக்கு – கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காணவுள்ளதாக கூறிய விடயமும் உண்மையானதல்ல.

இவை சர்வதேசத்துக்கு பொய்யை கூறி கடன்களை பெற்றுக்கொள்வதற்கான முயற்சியாகும்” என்று அவர் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team