ஜனாதிபதியின் புதல்வி ஓட்டமாவடி வருகை » Sri Lanka Muslim

ஜனாதிபதியின் புதல்வி ஓட்டமாவடி வருகை

IMG_7615

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

எம்.ஐ.அஸ்பாக்


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், இலங்கை திரு நாட்டின் ஜனாதிபதியுமான கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் புதல்வி சதுரிக்கா சிறிசேன அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா தொகுதிக்கான அமைப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ் ஹாறூன் ஸஹ்வி அவர்களின் அழைப்பினை  ஏற்று இன்று  (01.02.2018 வியாழக்கிழமை) ஒட்டமாவடிக்கு வருகை தந்தார்.

இதன் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா தொகுதிக்கான அமைப்பாளரின் மக்கள் தொடர்புக் காரியாலயத்தை திறந்து வைத்ததோடு, அல் கிம்மா நிறுவனத்தினையும் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து எல்லை வீதி மீராவோடையில் உள்ள அந்நூர் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகளிருக்கான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வேட்பாளர்கள் அனைவருக்கும் கட்சியின் வட்டாரத் தலைவர் நியமனங்களையும் வழங்கிவைத்தார்.

மேலும் மாவட்ட அமைப்பாளர் காரியாலயம் ஓட்டமாவடி 3ம் வட்டார தேர்தல் காரியாலயம் ஆகியவற்றையும் திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_5428 IMG_7597 IMG_7615

Web Design by The Design Lanka