ஜனாதிபதியின் புதுவருட வாழ்த்துச் செய்தி » Sri Lanka Muslim

ஜனாதிபதியின் புதுவருட வாழ்த்துச் செய்தி

maith

Contributors
author image

ஜனாதிபதி ஊடகப்பிரிவு

கலாசார மனிதனை பரிபூரணப்படுத்தும் வகையிலேயே மானிட கலாசாரம் பல யுகங்களாக பரிணாமம் அடைந்து வந்திருக்கின்றது. உலகின் பல்வேறு இனத்தவர்களும் வருடாந்தம் கொண்டாடும் அவர்களது தேசிய அடையாளத்தை வெளிப்படுத்தும் கலாசார வைபவங்கள், அவர்கள் தமது பாரம்பாரிய உரிமைகளுடன் கொண்டிருக்கும் பிணைப்பினையும் அயராத அர்ப்பணிப்பினையுமே வெளிப்படுத்துகின்றது.

சிங்கள – தமிழ் புத்தாண்டின் மூலமாக, கீழைத்தேய வாசிகளாகிய எம்முடைய உயரிய பண்பாடே வெளிப்பட்டு நிற்கின்றது.

புதுவருடம் என்பது உண்மையிலேயே புதிய பார்வையும் புதிய நோக்கும் கொண்ட புதியதோர் மனிதனை சமூகத்திற்கு பெற்றுக் கொடுப்பதேயாகும். புத்தாண்டு பிறக்கும் புண்ணிய காலத்தில் தத்தமது நம்பிக்கைகளுக்கு அமைவாக புத்தாண்டு சம்பிரதாயங்களுடன் இணையும் இந்த புதுமனிதன், புத்தாண்டு பிறப்புடன் அமைதி, சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை முன்னிலைப்படுத்தி சொந்த பந்தங்களை காணச் செல்லும் ஒரு சொந்தக்காரனாகவே இச்சமூகத்தில் பிரவேசிக்கிறான்.

அந்நியோன்னிய பிணைப்பும் சமூகத் தொடர்பாடலும் வசந்த காலத்தில் மலரும் மலர்களைப் போல் மலர்கின்ற பண்டைய பழக்க வழக்கங்களுடன் பிணைந்த புத்தாண்டானது, தனிமனித சிந்தனையை முதன்மைப்படுத்தி எமது ஆழமான புரிந்துணர்வையும் புத்தாண்டின் மீது நாம் கொண்டுள்ள நன்மதிப்பையுமே, எதிர்காலத்தை நோக்கிக் கொண்டு செல்கின்றது.

ஒட்டுமொத்த சமூகத்திற்கும் சாதகமான குணாதிசயங்களையும் நன்நடத்தையையும் போதிக்கும் மகத்தான கலாசார நிகழ்வான இவ்விழாவை ஆழமாக அறிந்து மிக கோலாகலமாக கொண்டாடுவதன் மூலம் சமாதானத்தினதும் சௌபாக்கியத்தினதும் விளைச்சலை அறுவடை செய்வதற்கான வாய்ப்பு நிச்சயமாக எமக்கு கிட்டும்.

இயற்கைக்கும் மனிதனுக்குமிடையில் தொன்றுதொட்டு இருந்துவருகின்ற இடைவிடா பிணைப்பும், மனிதனுள் இருக்கின்ற நன்றியுணர்வு பற்றிய உணர்வுபூர்வமான அர்ப்பணிப்பினை புத்தாண்டு சம்பிரதாயங்கள் மூலமாக வெளிப்படுத்துதலானது, எமது முன்னோர்கள் கொண்டிருந்த உன்னத பண்புகளையே பறைசாற்றுகின்றது.

அத்தகைய உயரிய பண்பாட்டினை காலத்திற்கேற்ப புதுப்பிற்கும் வகையில் கொண்டாடப்படும் சிங்கள – தமிழ் புத்தாண்டு நம் நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழ்ந்து வருகின்ற இலங்கையர்களுக்கு சமாதானமும் சௌபாக்கியமும் மிக்க இனிய புத்தாண்டாக அமைய வேண்டுமென்று எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்;.

மைத்ரிபால சிறிசேன
2018 ஏப்ரல் 14 ஆம் திகதி

Web Design by The Design Lanka