ஜனாதிபதியுடன் ஹரீஸ் பேச்சு - அம்பாறையில் போதைப்பொருள் வியாபாரிகளை பிடிக்க விசேட குழு..! - Sri Lanka Muslim

ஜனாதிபதியுடன் ஹரீஸ் பேச்சு – அம்பாறையில் போதைப்பொருள் வியாபாரிகளை பிடிக்க விசேட குழு..!

Contributors

(சர்ஜுன் லாபீர்)

இன்று எமது சமூகத்தில் அதிகமான தாக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் போதைவஸ்து பாவனையும் அதனை விற்பனை செய்பவர்களையும் பொதுமக்கள் முன்வந்து தகவல்களை தெரிவிக்க வேண்டும் என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவருமான எச்.எம்.எம் ஹரீஸ் தெரிவித்தார்.

இன்று(14) தனது காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்…

போதைவஸ்து வியாபாரமும் அதற்கு அடிபணிவர்களின் தொகையும் இன்று கூடிக்கொண்டு போகின்றது.

இது சம்மந்தமாக மாவட்டத்தின் பொறுப்பு வாய்ந்த மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் அண்மைக்கால அம்பாறை மாவட்டத்தில் போதைபொருள் வியாபாரிகளின் ஊடுருவல் மிக தீவரமாக அதிகரித்துள்ளது.மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள் என பெரிய ஒரு வலையமைப்பில் இந்த போதைப் பொருள் வியாபாரம் நடைபெற்று வருகின்றது.

இதனால் பாடசாலை மாணவர்கள்,இளைஞர்கள் என இளம் சந்ததியினரே அதற்கு அடிமையாகி அவர்களை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லுகின்ற அளவுக்கு நிலை மோசமாக காணப்படுகின்றது.

இது சம்மந்தமாக நான் போதைப் பொருள் ஒழிப்பு பொலிஸ் பிரிவு, கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் அம்பரை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்,இராணுவத்தினர் என பல்வேறுபட்ட தரப்பினரோடு இதனை ஒழித்து சம்மந்தப்பட்டவர்களை கைது செய்வ வேண்டும் என்று நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசி வந்து இருக்கின்றேன்.

இருந்தும் இந்த போதை பொருள் தடுப்பு நடவடிகை திருப்தியான முறையில் நடைபெறவில்லை என்பது எங்களுக்கு கவலையான விடயமாக இருந்து வருகின்றது.இது சம்மந்தமாக நான் கடந்த 11ம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச எங்களது பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து பேசுகின்ற போது அவரிடமும் அம்பாறை மாவட்டத்தில் போதைபொருள் விற்பனை மற்றும் பாவனையாளர்களின் தன்மை கட்டுகடங்காமல் தலைவிரித்து ஆடுகின்றது என்கின்ற விடயத்தை எடுத்து கூறி அம்பாறை மாவட்டத்தில் அதனை கட்டுப்படுத்துகின்ற தன்மை வெற்றிகரமாக நிறைவேற்றப்படவில்லை என்பதோடு நாட்டின் ஏனைய பகுதிகளில் அதனை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளை இங்கும் எடுக்க வேண்டும் என்கின்ற விடயத்தை தெளிவாக எடுத்து கூறினோம்.

இதற்காக கொழும்பில் இருந்து ஒரு குழுவினை அம்பாறை மாவட்டத்திற்கு அனுப்புவதாகவும் மற்றும் போதைப்பொருள் மொத்த சில்லறை விற்பனையாளர்கள், பாவனையாளர்கள் ஆகியோர்களின் தவல்களை பெறுவதற்காக இராணுவம் மற்றும் பொலிஸ் புலன்னாய்வு பிரிவுக்கு இன்றே உத்தரவு பிறப்பிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இது சம்மந்தமாக பொதுமக்களை தகவல்களை வழங்குவதற்கு மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் நீங்கள் பகிரங்கமாக வேண்டுகோள் விடுங்கள் போதைபொருள் வியாபாரிகள் மற்றும் பாவனையாளர்களின் தகவல்களை வழங்குகின்ற பொதுமக்களின் தகவல்கள் இரகசியமான முறையில் பாதுக்காக்கப்படும் என்றும் அதேநேரம் சம்மந்தப்படவர்கள் எந்தவொரு பாகுபாடும் இன்றி கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.என்பதனை ஜனாதிபதி உறுதியாக குறிப்பிட்டார்.

எனவே அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள்,பள்ளிவாசல் நிர்வாகிகள்,உலமாக்கள் புத்திஜீவிகளிடம் வேண்டுகோள் விடுப்பது தயவு செய்து உங்களுடைய முழுமையான கவனத்தை செலுத்தி எமது எதிர்கால சந்ததியை காப்பாற்ற வேண்டும் என்றால் இந்த போதைவஸ்து வியாபாரிகளை சமூகத்தில் இருந்து அவர்களை அப்புறப்படுத்துகின்ற நடவடிக்கைகளில் நாம் முழுமையாக ஈடுபட வேண்டும்.அவர்களை இரானுவத்தினர்,பொலிஸார் கைது செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு நாம் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுகொள்ள விரும்புகின்றேன்.

இதுவிடயமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுபினர்கள்,உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஏனையவர்களோடு நான் பேச இருக்கின்றேன் அவர்களின் ஒத்துழைப்புகளோடு

அம்பாறை மாவட்டத்தை போதைபொருள் பாவனையில் இருந்து முழுமையாக மீட்டெடுக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கவுள்ளோம் என குறிப்பிட்டார்.

எந்தவொரு எதிர்ப்புக்கள் வந்தாலும் அத்தனையும் தகர்தெரிந்து முழுமையாக இந்த விடயத்தில் நாங்கள் கூடிய கவனம் செலுத்தி எமது இளம் சமூகத்தினரையும் மக்களையும் பாதுகாப்பதற்கு முழு மூச்சாக செயற்படப்போவதாக குறிப்பிட்டார்.

எந்த காலகட்டத்தில் முஸ்லிம்,தமிழ் சமூகங்கள் பெரும் நெருக்கடிக்களுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து கொண்டு வருகின்றது.எனவே எமது சமூகத்தினை ஒரு சில அற்ப ஆசைகாலுக்காக வழிக்காட்காமல் எமது சமூகங்களின் உயிர் நாடியாக இருக்கின்ற கல்வி,பொருளாதாரம் கலச்சாரம் ஏனைய விடயங்களை இதனூடாக சீரழுக்காமல் ஓர் உயரிய சமூகத்தினை கட்டியெழுப்புவதற்கு எல்லோம் ஒன்று பட வேண்டும்.

அதே போன்று எமது பெரும்பான்மை சமூகம் போதைவஸ்தை தடை செய்வதற்கு எவ்வாறு தங்களுடைய முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கினார்களோ அவ்வாறே நமது சமூகத்தினரும் வழங்குவதற்கு முன்வர வேண்டும்.மேலும் இதனுடைய பாரதூரமான தன்மைகளை உலமாக்கள் பள்ளிவாசல்களில் பயான்கள் மூலமாகவும், ஒலிபெருக்கிகள் மூலமாகவும் எடுத்துரைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

Web Design by Srilanka Muslims Web Team