ஜனாதிபதி அமெரிக்காவுக்குப் பயணம் - Sri Lanka Muslim
Contributors
author image

Press Release

ஐக்கிய நாடுகளின் 69வது அமர்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி இன்று அமெரிக்கா பயணமாகவுள்ளார்.

 

இன்று பிற்பகல் அவர் பயணத்தை மேற்கொள்வார் என ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் எதிர்வரும் 24ம் திகதி, ஐக்கிய நாடுகளின் 69வது பொது அமர்வுகளில், பொது விவாதம் இடம்பெறும்.

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 25ம் திகதி ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றவுள்ளார்.

 

இந்தநிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், மஹிந்த ராஜபக்ஷவும் சந்திப்பை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team