ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு பதிலாக புதிய ஆட்சிமுறை!- ஐ.தே.கட்சி தீர்மானம் - Sri Lanka Muslim

ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு பதிலாக புதிய ஆட்சிமுறை!- ஐ.தே.கட்சி தீர்மானம்

Contributors

ஜனாதிபதி ஆட்சி முறைமை ஒழித்து புதிய அரசியல் அமைப்புச் சட்டம் ஒன்றை கொண்டு வரும் வாக்குறுதியை முன்வைத்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது என ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

இது சம்பந்தமான யோசனை எதிர்வரும் 21ம் திகதி நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் 55 வது வருடாந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ளது.

மாநாட்டில் முன்வைக்கப்பட உள்ள யோசனைகளுக்கு நேற்று கூடிய அந்த கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது, புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை இயற்றுவது, வாழ்க்கை செலவை குறைக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பது, தலைமைத்துவச் சபை உட்பட பல யோசனைகள் இதில் அடங்கியுள்ளன.

இந்த யோசனைகளை மாநாட்டில் நிறைவேற்ற எண்ணியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.(lw)

Web Design by Srilanka Muslims Web Team