ஜனாதிபதி சிறந்த நீதிபதியாக, செயற்படுவார் என எதிர்பார்க்கிறோம் - எல்லே தேரர் தெரிவிப்பு..! - Sri Lanka Muslim

ஜனாதிபதி சிறந்த நீதிபதியாக, செயற்படுவார் என எதிர்பார்க்கிறோம் – எல்லே தேரர் தெரிவிப்பு..!

Contributors

தடுப்பூசி போடும் வேலைத்திட்டத்தின் போது மொறட்டுவை நகர சபைத் தலைவர் நடந்து கொண்ட விதத்தை கண்டித்து, ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கையை பாராட்டுவதாகவும் எதிர்காலத்தில் நாட்டின் ஏனைய முக்கிய பிரச்சினைகளின் போதும் ஜனாதிபதி சிறந்த நீதிபதியாக செயற்படுவார் என எதிர்பார்ப்பதாகவும் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஆட்சியாளர் மக்களின் பிரச்சினைகளை சரியாக புரிந்துக்கொண்டு பரந்த நோக்கத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆட்சியாளர் தன்னை ஆட்சிக்கு கொண்டு வந்த மக்கள் குறித்து நல்ல புரிந்துணர்வுடன் இருந்து அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அமைதியாக செவிமடுப்பது முக்கியமானது.

தடுப்பூசி போடும் வேலைத்திட்டத்தில் மொறட்டுவை நகர சபைத் தலைவர் நடந்துக்கொண்ட விதம் கவலைக்குரியது.

நாட்டின் தற்போதைய சந்தர்ப்பத்தில் அரசியல்வாதிகள் மாத்திரமல்லாது சாதாரண மக்களும் தங்களால் முடிந்தளவுக்கு சுகாதார துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குவது முக்கியமான கடமையாகும்.

இப்படியான துரதிஷ்டவசமான சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எல்லே குணவங்ச தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team