ஜனாதிபதி தயக்கத்துடன் பொதுமுடக்கத்தை அமுல்படுத்துகிறார்..! - Sri Lanka Muslim

ஜனாதிபதி தயக்கத்துடன் பொதுமுடக்கத்தை அமுல்படுத்துகிறார்..!

Contributors

K. Ratnayake

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வெள்ளிக்கிழமை மாலை ஆற்றிய திடீர் ‘விசேட உரையில்’, அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் மரணங்களுக்கு பதிலிறுக்கும் விதமாக 10 நாள் மட்டுப்படுத்தப்பட்ட தேசிய பொது முடக்கத்தை அறிவித்தார்.

டெல்டா மாறுபாடு வேகமாக பரவுவதைத் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்குமாறு சுயாதீன மருத்துவ நிபுணர்கள் விடுத்த வேண்டுகோள்களை ராஜபக்ஷ தொடர்ந்து நிராகரித்து வந்த பின்னரே அவர் இந்த உரையை ஆற்றினார்..

கோட்டாபய ராஜபக்ஷ (AP Photo/Eranga Jayawardena)
தேசிய பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளதால், தயக்கத்துடனேயே முடக்கத்தை அமுல்படுத்துவதாக ராஜபக்ஷ தெளிவுபடுத்தினார். நீண்டகால முடக்கம் தேவைப்பட்டால் மக்கள் ‘அதிக தியாகங்களை செய்யத் தயாராக இருக்க வேண்டும்’ என்று அவர் எச்சரித்தார்.

ஆகஸ்ட் 1 மற்றும் 23 ஆம் திகதிக்கு இடைப்பட்ட நாட்களில், இலங்கையின் உத்தியோகபூர்வ கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை 85,516 ஆக அதிகரித்துள்ளதுடன் மரண எண்ணிக்கை 2,838 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கைகள், டெல்டா மாறுபாட்டில் இருந்து உலகளவில் அதிகரித்து வரும் நோய்த்தொற்றுகள் மற்றும் மரணங்களுக்கு ஏற்ப இடைவிடாமல் அதிகரித்து வருகின்றன.

ஜூலை 5 அன்று எஞ்சியிருந்த பயணக் கட்டுப்பாடுகளையும் நீக்கிய கொழும்பு அரசாங்கம், ஆகஸ்ட் 2 அன்று வீட்டிலிருந்து வேலை செய்யும் அனைத்து அரச ஊழியர்களும் தங்கள் வழக்கமான வேலைத் தளங்களுக்குத் திரும்புமாறு உத்தரவிட்டு வைரஸ் பரவுவலைத் தூண்டிவிட்டது. இலங்கையின் சீரழிந்து வரும் சுகாதார கட்டமைப்பால் இப்போது அதிகப்படியான கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கையை சமாளிக்க முடியவில்லை.

வெள்ளிக்கிழமை மட்டுப்படுத்தப்பட்ட தேசிய முடக்கத்தை அறிவிக்கும் இராஜபக்ஷவின் முடிவு, மக்கள் மீதான அனுதாபத்தினால் எடுக்கப்பட்டது அல்ல, மாறாக அரசாங்கத்துடனான ஒரு மோதலை நோக்கி வளர்ந்து வரும் தொழிலாள வர்க்க அமைதியின்மைக்கான பதிலிறுப்பாகும். பல்வேறு வேலைத் தளங்களில் அதிகரித்து வரும் நோய்த்தொற்றுகள் மற்றும் மரணங்களின் தகவல்களுக்கு ஏற்ப அரசாங்கத்திற்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த புதன்கிழமை, ஆயிரக்கணக்கான சுகாதார ஊழியர்கள் உடனடி முடக்கத்தைக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிலைமை கட்டுப்பாட்டை மீறிவிடும் என்ற பீதியில், சுகாதார, ரயில், வங்கிகள், கல்வி, தபால், மின்சாரம் மற்றும் தனியார் துறைகளில் உள்ள பல தொழிற்சங்கங்கள், ஜனாதிபதிக்கு ‘விஞ்ஞானப்பூர்வமான முடக்கத்தை’ அமுல்படுத்தக் கோரி ‘இறுதி எச்சரிக்கை’ ஒன்றை வெளியிட்டன. இந்த கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்க தவறினால், தொழிற்சங்கத்தினர் தங்கள் உறுப்பினர்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்துவதாகக் கூறினர்.

எவ்வாறாயினும், இந்த தொழிற்சங்கங்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் நடுப்பகுதியில் பொருளாதாரத்தை ‘மீண்டும் திறக்க’ ஒப்புதல் அளித்ததுடன் பெரிய வணிகங்கள் தொடர்ச்சியாக இயங்குவதை ஆதரித்தன. அவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பு மட்டுமே அதிக கட்டுப்பாடுகள் மற்றும் கோவிட் -19 சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்துமாறு கோரத் தொடங்கினர்.

அவர்கள் மௌனமாக இருந்ததன் விளைவாக, கிட்டத்தட்ட அனைத்து அரச நிறுவனங்களிலும் வேலைநிறுத்தங்களை தடை செய்த இராஜபக்ஷ அரசாங்கத்தின் கடுமையான அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தையும் அவர்கள் ஆதரித்தனர். பொது முடக்கத்துக்கு அவர்கள் அழைப்பு விடுத்தமையானது தொழிலாளர்கள் மத்தியில் பெருகிவரும் கோபத்தை திசைதிருப்புவதையும் பெரிய வணிகர்களையும் இராஜபக்ஷ ஆட்சியை காப்பாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.

அதிகரித்து வரும் மரண எண்ணிக்கை அல்லது உடல்நலப் பேரழிவு குறித்து இராஜபக்ஷ ஒரு வார்த்தையும் பேசவில்லை, தங்களது அன்புக்குறியவர்களை இழந்து துயரமடைந்துள்ள குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவில்லை அல்லது பெரும் கஷ்டங்களுக்கு ஆளாகியுள்ள குடும்பங்கள் மீது அனுதாபம் காட்டவில்ல. அதற்கு பதிலாக, அவர் ஆணவத்துடன் கோவிட் -19 ஆல் பாதிக்கப்படுபவர்களைப் பாதுகாக்க எல்லாவற்றையும் செய்வதாகக் கூறி தன்னை ஒரு மீட்பராகக் காட்டிக்கொண்டார்.

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் உச்சரிக்கும் தினசரி மந்திரங்களுக்கு ஏற்ப, மக்கள் ‘யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்’ என்று இராஜபக்ஷ அறிவித்தார். எல்லா நாடுகளும் ‘புதிய வழமையை’ ஏற்றுக்கொள்கின்றன மற்றும் “மக்கள் வைரசுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்’ என்று அவர் மேலும் கூறினார் வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தொழிலாளர்கள் தொடர்ந்து உழைத்து பெரிய வணிகங்கள் அவற்றின் இலாபத்தை அதிகரித்துக்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதாகும்.

‘தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வு’ என்று கூறிய அவர், இது ‘உலக சுகாதார அமைப்பு, பெரும்பாலான மருத்துவ நிபுணர்கள் மற்றும் … உலகளாவிய தரப்படுத்தப்பட்ட வழிமுறையாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து’ என்று பொய்யாகக் கூறினார்.

செப்டம்பர் 10க்குள் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்ய போதுமான தடுப்பூசிகளை அரசாங்கம் இறக்குமதி செய்வதாக ராஜபக்ஷ கூறினார். அதன் பிறகு சுகாதார அதிகாரிகள் 30 முதல் 18 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கொடுக்கத் தொடங்குவார்கள்.

இந்த அபிவிருத்தியுடன், “நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை குறையும்,” என்று அவர் அறிவித்தார். எனினும், இதுவரை தடுப்பூசி போடப்பட்டவர்களில் 43 சதவிகிதத்தினர் மட்டுமே இரண்டு பாகங்களையும் பெற்றுள்ளனர் என்று ராஜக்ஷ ஒப்புக்கொண்டார்.

கோவிட்-19 வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு தடுப்பூசி ஒரு முக்கிய கருவியாக இருந்தாலும், அதன் மூலம் உலகில் எங்கும் தொற்றுநோயை ஒழிக்க முடியாது. எல்லா இடங்களிலும் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு இந்த கொடிய வைரஸை ஒழிக்க ஒரு வேலைத்திட்டம் அவசியமாகும்.

ராஜபக்ஷவின் 16 நிமிட உரையின் பெரும்பகுதி ஆட்சியும் முதலாளித்துவ வர்க்கமும் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியையும், பொது முடக்கம் மற்றும் கட்டுப்பாடுகள் ஏன் வெறுக்கத்தக்கவையாக இருக்கின்றன என தெளிவுபடுத்தியது.

கடந்த 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கை அதன் மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சியை எதிர்கொண்டது – ஆடைத் தொழிற்துறையால் உருவாக்கப்பட்ட 5 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு வருவாய் ‘கடுமையாகப் பாதிக்கப்பட்டது;’ ஆண்டுதோறும் 4.5 பில்லியன் டொலர் மதிப்புள்ள சுற்றுலாத் துறை சரிந்து போனதுடன்; மேலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் இழக்கப்பட்டுள்ள, என அவர் தெரிவித்தார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவிகிதம் பங்களிப்பு செய்யும் நடுத்தர மற்றும் சிறு வணிகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் கூறினார். சுற்றுலா, தினசரி ஊதியதாரர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களில் சுமார் 4.5 மில்லியன் மக்கள் தங்கள் வருமான ஆதாரங்களை இழந்துள்ளனர்.

பின்னர், அரசாங்கம் ‘தனது பொறுப்பை கைவிடவில்லை’ என்று கபடத்தனமாக அறிவித்த இராஜபக்ஷ, 5,000 ரூபாய் (25 டொலர்) நிவாரணக் கொடுப்பனவுகளை வழங்க மொத்தம் 30 பில்லியன் ரூபாய்களை செலவழித்துள்ளது என்றார். குறைந்த எண்ணிக்கையிலான குடும்பங்களுக்கு கடந்த ஆண்டு மூன்று முறை வழங்கப்பட்ட இந்தத் தொகை, பட்டினிக் கொடுப்பனவு என்று மட்டுமே விவரிக்க முடியும். விரக்தியடைந்த குடும்பங்கள் தங்களிடம் இருந்த விலைமதிப்பான பொருட்களை அடகு வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தனிமைப்படுத்தலுக்கு தள்ளப்பட்ட குடும்பங்களுக்கு இரண்டு வார அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்ய 10,000 ரூபாய் வழங்கப்பட்டதாக அவர் வெட்கமின்றி வலியுறுத்தினார். இது சுகாதார நெருக்கடியை சமாளிக்க முயற்சிக்கும் குடும்பங்களுக்கு முற்றிலும் போதுமான தொகை அல்ல.

வெளிப்படையாக, அரசாங்கம் ‘1.4 மில்லியனுக்கும் அதிகமான அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க அல்லது கொடுப்பனவுகளை வெட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என இராஜபக்ஷ தெரிவித்தார். ஊதியம் மற்றும் கொடுப்பனவு வெட்டுக்களை பற்றி ஜனாதிபதி குறிப்பிட்டமை, அது பரிசீலனையில் இருப்பதைக் குறிக்கிறது.

நெருக்கடியின் சுமையை மக்கள் மீது சுமத்துவதற்கு ஏற்ப, அரிசி, மாவு, பருப்பு, உருளைக்கிழங்கு, கருவாடு மற்றும் எரிவாயு உள்ளிட்ட எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அரசாங்கம் அதிகரித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை நிலவுவதாக செய்திகள் கூறுகின்றன.

பெரிய வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு அரசாங்கத்தின் ஆடம்பரமான சலுகைகள் பற்றிய எந்தவொரு குறிப்பையும் தெரிவிப்பதை ஜனாதிபதி கவனமாக தவிர்த்துக்கொண்டார். அரசாங்கம் பெரும் வணிகங்களுக்கு மலிவான கடன் மற்றும் வரிச்சலுகைகளை வழங்கிமையும் சம்பளம் மற்றும் தொழில்களை வெட்டிக் குறைக்க அனுமதித்தமையும், கம்பனிகளுக்கு பெரும் இலாபத்தை ஈட்டிக்கொடுத்துள்ளன. கடந்த ஆண்டு, இலங்கையின் ஒன்பது பெரிய நிறுவனங்கள் 80 பில்லியன் ரூபாய் லாபம் ஈட்டி உள்ள அதேவேளை, இந்த ஆண்டு அதிக இலாபத்தை எதிர்பார்த்துள்ளன.

சர்வதேச நிதி நிறுவனங்களுக்கான கடமைப்பாடுகளை பேணி, அரசாங்கம் ஆண்டுக்கு சராசரியாக 4 பில்லியன் டாலர் வெளிநாட்டு கடனைத் திருப்பிச் செலுத்துவதாக இராஜபக்ஷ கூறினார்.

கடுமையான பொதுமுடக்க நடவடிக்கைகளை விதிக்க தனது அரசாங்கம் ஏன் தயங்குகிறது என்பதை வெளிப்படுத்திய இராஜபக்ஷ இவ்வாறு கூறினார்: “ஏற்றுமதித் துறையில் ஆடைத் தொழிற்துறையினரால் ஏராளமான அனுப்பாணைகள் பெறப்பட்டுள்ளன. இந்த அனுப்பாணைகளை எங்களால் சரியான நேரத்தில் வழங்க முடியாவிட்டால், நாம் அதிக அளவு அந்நிய செலாவணியை இழக்க நேரிடும்.”

ஆடைத் தொழிற்துறையில் மட்டுமல்லாமல் மனித உயிர்களுக்கு முன்னால் இலாபத்துக்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலம், ஆளும் உயரடுக்கினதும் ஒட்டுமொத்த முதலாளித்துவ முறைமையினதும் இலாப நலன்களைப் பாதுகாக்க ராஜபக்ஷ தீவிரமாக முயற்சி செய்கிறார்.

தனது உரையை முடிக்கும் போது, தேசிய ஒற்றுமைக்காக ஒரு வேண்டுகோள் விடுத்த ராஜபக்ஷ, மறைமுகமாக ஒரு அச்சுறுத்தலை வெளியிட்டார். ‘இந்த சூழ்நிலையானது பல்வேறு சித்தாந்தவாதிகள், தொழிற்சங்கங்கள், மருத்துவர்கள், ஏனைய சுகாதார அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்திற்கும் இடையிலான போட்டி அல்லது மோதலுக்கான சூழல் அல்ல… இது வேலைநிறுத்த நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களுக்கான நேரம் அல்ல. நாட்டை சீர்குலைக்க முயற்சிக்காதீர்கள் … சுகாதாரத் துறை இந்தப் பிரச்சினையை ஒரு கோணத்தில் இருந்தே பார்க்கிறது, ஒரு அரசாங்கமாக நாம் நம் நாட்டில் உள்ள சிறிய பொருளாதாரத்தை நிர்வகிக்க வேண்டும்”

ஆகஸ்ட் 11 அன்று, பொது முடக்கம் மற்றும் பிசிஆர் பரிசோதனை கோரி கம்பளை மருத்துவமனை சுகாதார ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் (WSWS media)
முன்னெப்போதும் இல்லாத சுகாதார அவசரநிலையை சமாளிக்க, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் ஏனைய மேம்பாடுகளை கோரி, சமீப மாதங்களில் நாடு முழுவதும் அதிகரித்து வரும் போராட்டங்களில் சுகாதாரப் பணியாளர்கள் முன்னணியில் உள்ளனர்.

எவ்வாறெனினும், ஜனாதிபதியின் அச்சுறுத்தல், சுகாதார ஊழியர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, முழு தொழிலாள வர்க்கத்திற்கும் எதிரானது ஆகும். நாடு நீண்ட காலத்திற்கு முடக்க நிலையில் இருக்க வேண்டும் என்றால், ‘நாட்டில் உள்ள அனைவரும் அதிக தியாகங்களை செய்யத் தயாராக இருக்க வேண்டும்,’ என்று அவர் கூறினார்.

இந்த ‘தியாகங்கள்’ பற்றி ராஜபக்சே விரிவாகக் கூறவில்லை. எவ்வாறாயினும், அரசாங்க அமைச்சர்கள், அரச மற்றும் தனியார் துறைகளில் ஊதியக் குறைப்புக்காக பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளனர், மேலும் ஊடகங்கள் இத்தகைய நடவடிக்கைகளின் அவசியம் குறித்து தலையங்கங்களை எழுதுகின்றன.

ஐலண்ட் பத்திரிகையில் ஒரு தலையங்கம், ‘இத்தகைய கடுமையான நடவடிக்கை [ஊதியக் குறைப்பு] தவிர்க்க முடியாததாகிவிடும்… தற்போதைய விகிதத்தில் அரச வருவாய் குறைந்து கொண்டே போனால், சம்பளம் அல்லது உயிர்காக்கும் மருந்துகளுக்கு கூட நிதி இருக்காது. இந்த கசப்பான உண்மையை மக்களுக்கு சொல்ல வேண்டும்,” என பிரகடனம் செய்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team