ஜனாதிபதி தலைமையில் அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்றோர் நாளை கொழும்பில் சந்திப்பு » Sri Lanka Muslim

ஜனாதிபதி தலைமையில் அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்றோர் நாளை கொழும்பில் சந்திப்பு

slfp

Contributors
author image

ஜனாதிபதி ஊடகப்பிரிவு

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அபேட்சகர்களுக்கும் ஜனாதிபதி அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை (15) கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறும்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அனைத்து அபேட்சகர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.

Web Design by The Design Lanka