ஜனாதிபதி தேர்தலில் யாரை களமிறக்குவது என்பது குறித்து தீர்மானிக்கவில்லை - கபீர் ஹாசீம் MP - Sri Lanka Muslim

ஜனாதிபதி தேர்தலில் யாரை களமிறக்குவது என்பது குறித்து தீர்மானிக்கவில்லை – கபீர் ஹாசீம் MP

Contributors
author image

Editorial Team

ஜனாதிபதி தேர்தலில் யாரைக் களமிறக்குவது என்பது குறித்து இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. கட்சியின் தேசியத் தலைவர் ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

 

எனினும், இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை கட்சியின் சார்பில் களமிறக்குவது என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.எவ்வாறெனினும், முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கும் திட்டங்கள் கிடையாது எனவும் ஆதரவளிக்க தீர்மானிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

ஊவா மாகாணசைபத் தேர்தல்களின் பின்னரே இது குறித்து நிர்ணயிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team