ஜனாதிபதி தேர்தல் ஜனவரியில்? - Sri Lanka Muslim
Contributors
author image

Editorial Team

ஜனாதிபதி தேர்தலை ஜனவரி முதல் இரண்டு வாரங்களுக்குள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதன்படி ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 7ம் திகதிக்கும் 11ம் திகதிக்குமிடையில் நடத்தப்படவுள்ளதாக அத்தகவல்கள் தெரிவிப்பதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலை அறிவிப்பார் எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மஹிந்த ராஜபக் ஷவின் இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் நான்கு ஆண்டுகள் நவம்பர் 19ம் திகதியுடன் முடிவடைகின்றது.
 
ஜனாதிபதித் தேர்தலை ஜனவரி மாதம் இறுதிப்பகுதியில் நடத்த அரசாங்கம் முன்னர் தீர்மானித்திருந்த போதும் பாப்பரசர் ஜனவரி 13 ம் திகதி மற்றும் 14ம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதால் ஜனாதிபதித் தேர்தலை அதற்கு முன்னர் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவடைந்தவுடனேயே ஜனாதிபதித்தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கவும் அரசு தீர்மானித்துள்ளது.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி பிரதி நிதிகள் மாநாடு மகளிர் மற்றும் இளைஞர் மாநாடுகளை நடத்தி ஜனாதிபதி தேர்தலுக்கு தேவையான நடவடிக்கைகளை அரசு ஏற்கனவே ஆரம்பித்துள்ளது. (VK)

Web Design by Srilanka Muslims Web Team