ஜனாதிபதி தேர்தல் நடத்துவதில் சட்ட சிக்கல் - Sri Lanka Muslim

ஜனாதிபதி தேர்தல் நடத்துவதில் சட்ட சிக்கல்

Contributors

அரசியல் அமைப்புச் சட்டத்தில் காணப்படும் சிக்கல் காரணமாக பதவிக்காலம் முடியும் முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் விளக்கத்தை பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

1978 ஆம் ஆண்டின் இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரவு அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஜனாதிபதியாக ஒரு இரண்டு முறை மாத்திரமே பதவி வகிக்க முடியும்.

இதில் திருத்தங்களை கொண்டு வந்து 18 வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம், ஒருவர் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் ஜனாதிபதியாக பதவி வகிக்கலாம் என்ற திருத்தத்தை அரசியல் அமைப்புச் சட்டத்தில் புகுத்தியது.

இதில் பதவிக்காலம் முடியும் முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தலாமா இல்லையா என்பது குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இதன் காரணமாக முன்கூட்டியே தேர்தல் நடத்துவது தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் விளக்கத்தை கோர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியாக ஒருவர் முதல் முறையாக பதவியேற்று நான்கு வருடங்களின் பின்னர் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்தலாம் என அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இரண்டாவது முறை பதவியேற்ற பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் 18 வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படாதது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.lw

Web Design by Srilanka Muslims Web Team