ஜனாதிபதி பொதுவேட்பாளருடன் இன்னும் நால்வர் ஜனாதிபதி வேட்பாளர்களாக! - Sri Lanka Muslim

ஜனாதிபதி பொதுவேட்பாளருடன் இன்னும் நால்வர் ஜனாதிபதி வேட்பாளர்களாக!

Contributors

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்க்கட்சி பொது வேட்பாளர் உள்ளடங்கலாக இன்னும் வேட்பாளர்கள் நால்வர் போட்டியிடுவதற்கு தயார் நிலையில் இருப்பதாகத் தெரியவருகின்றது.

 

அதற்கேற்ப, பொது வேட்பாளர் தவிர ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, முஸ்லிம் அரசியல் கட்சிகளிலிருந்து இந்த வேட்பாளர்கள் போட்டியிட முன்வந்துள்ளனர்.

 

எந்தவொரு ஜனாதபதி வேட்பாளருக்கும் 50% வாக்குகள் கிடைக்காமல் செய்வதே இதன் குறிக்கோளாக இருப்பதாகவும், இரண்டாவது விருப்பு வாக்குகளை எண்ணுமிடத்து பெரும்பாலும் எதிர்க்கட்சி வேட்பாளர் ஒருவருக்கு வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாகக் கருதுவதாகவும் மேலும் தெரியவருகின்றது.(iln)

 

Web Design by Srilanka Muslims Web Team