ஜனாதிபதி மகிந்தவை வாழ்த்திய ரஷ்ய ஜனாதிபதி புட்டின் - Sri Lanka Muslim

ஜனாதிபதி மகிந்தவை வாழ்த்திய ரஷ்ய ஜனாதிபதி புட்டின்

Contributors

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடீமீர் புட்டின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தொலைபேசி மூலம் நேற்று ஜனாதிபதியை தொடர்பு கொண்ட ரஷ்ய ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

அத்துடன் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் புட்டின் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவில் கடந்த 17ம் திகதி இடம்பெற்ற 50 பேர் உயிரிழக்க காரணமான விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ரஷ்ய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team