ஜனாதிபதி முறைமையை ஒழிக்க முஸ்லிம்களும் அணி திரளவேண்டும் - மாதுலுவே சோபித்த தேரர் - Sri Lanka Muslim

ஜனாதிபதி முறைமையை ஒழிக்க முஸ்லிம்களும் அணி திரளவேண்டும் – மாதுலுவே சோபித்த தேரர்

Contributors

-அஸ்ரப் ஏ சமத்-

இந்த நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்த தலைவர்களுள் ஒரு சிரேஸ்ட தலைவர் டி.பி. ஜாயா. அவர் போன்ற தலைவர்  இந்த நாட்டில் இன்னும் எந்த சமுகத்திலும் உருவாகவில்லை.  இந்த நாட்டின் அரசியல் முறையில் உள்ள அதிகாரம் பெற்ற ஜனாதிபதி முறைமையை நாம்  ஒழிக்க வேண்டும். அதற்காக முஸ்லிம்களாகிய நீங்களும் அணி திரளவேண்டு. இந்த நாட்டில் உள்ள  சுயாதீன தேர்தல் , பொலிஸ் ; நீதி ,கல்வி  மற்றும் நிர்வாக முறைமைகளை , மாற்றியமைப்பதற்கு முன்வாருங்கள். என  கோட்டே பிரதம தேரர்  காலாநிதி மாதுலுவே சோபித்த தேரர் அழைப்பு விடுத்தார் .

கலாநிதி  டி.பி ஜயாவின் 124வது வருட நினைவுச் சொற்பொழிவை நேற்று கொழும்பு முஸ்லிம் பெண்கள் கல்வி வட்ட நிலையத்தில் நடைபெற்றது. இவ் வைபவத்தில் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே மாதுலுவே தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவா; அங்கு உரையாற்றுகையில் நெல்சன் மண்டேலா போன்றோர் தென் ஆபிரிக்காவில் சகல சமுகங்களும் சமமாக வாழ்வதற்காக ஏற்படுத்திக் கொடுத்த அரசியல் முறைமை போன்று இலங்கையிலும் ஏற்படுத்த வேண்டும்.

டி.பி. ஜாயா பௌத்த பாடசாலையான ஆனந்தாக் கல்லூரியில்  ஆசிரியராக சேவையாற்றும்போது அப் பாடசாலை நிர்வாகம் பிலிப்குணவர்த்தனவை அகற்ற முற்படும்போது தண்னையும் சேர்த்து  விலக்குமாறு ஜாயா கேட்டுக்கொண்டார். அதற்காக பிலிப்குணவர்தனவைஅப்பாடசாலையில் இருந்து அக்ற்றாமல்
அவரோடு சேர்ந்து  சேவையாற்ற பாடுபட்டவர் ஜாயா

அவர் போன்ற தலைவர்கள் தற்காலத்தில் தமது நாட்டில் இல்லை. இந்த நாட்டில் உள்ள பொலிசைக் கூட நாம் நம்பமுடியவில்லை. அவர்களே போதைப்பொருள் விற்பவர்களாக மாறியுள்ளனர். இந்த நாட்டில் உள்;ள லஞ்ச ஆணைக்குழுத் தலைவரேயே கைது செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது எனத் தெரிவித்தார்
.
இந் நிகழ்வு அஸ்ரப் ஹூசைன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் ரோஹித்த போகலாவெலவும் இங்கு உரையாற்றினார்.

1256

Web Design by Srilanka Muslims Web Team