ஜனாதிபதி வீட்டில் வளர்ந்த பெண் பிள்ளை நான் – ஹிருனிகா » Sri Lanka Muslim

ஜனாதிபதி வீட்டில் வளர்ந்த பெண் பிள்ளை நான் – ஹிருனிகா

Contributors

ஜனாதிபதிக்கும் தனக்கும் இடையிலான நட்பை இல்லாது செய்ய பலர் முயற்சிப்பதாக தெரிவித்துள்ள ஹிருனிகா பிரேமசந்திர, ஜனாதிபதி வீட்டில் வளர்ந்த பெண் பிள்ளை தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய கொழும்பு இணை அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஹிருனிகா பிரேமசந்திரவை வரவேற்கும் விசேட நிகழ்வு கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொலன்னாவை பிரதேச மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய கொழும்பு இணை அமைப்பாளர் ஏ.எச்.எம்.பௌசி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

கொலன்னாவ பிரதேசத்தின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலர் இதன் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டனர் .

தனது தந்தைக்கு நீதியை பெற்றுக்கொடுக்க பாரிய போராட்டத்தை முன்னெடுத்ததாக, குறிப்பிட்டுள்ள அவர், அரசியல் பிரவேசத்துடன் இந்த போராட்டம் மேலும் வலுவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

எனது இந்த தீர்மானம் தொடர்பில் பலர் என் மீது குறைகூறினார்கள். இவற்றுக்கு நான் பதிலளிக்கபோவதில்லை. இன்றுடன் பதிலளிப்புக்கள் நிறைவடைந்து விட்டது. எனக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் காணப்படும் நட்பை இல்லாது செய்ய பலர் முயற்சித்தனர்.

அந்த குடும்பமும் நானும் ஒன்றாகவே வளர்ந்தோம். சகோதரன் நாமல், யோஷித மற்றும் ரோஹித்த உடன் நானும் ஒன்றாகவே வளர்ந்தேன். அந்த குடும்பத்துக்கு பெண் பிள்ளை ஒன்று இருக்கவில்லை. அங்கு நான் தான் ஓடிஆடி விளையாடினேன். அந்த வீட்டில் வளர்க்கப்பட்ட பெண் பிள்ளை நான் தான்.

ஜனாதிபதியும் அவரது பாரியார் ஷிராந்தியும் என் மீது அந்தளவிற்கு அன்பு வைத்திருந்தனர். எதிர்காலத்தில் இந்த நிலைமை பெரும் சிக்கலாக அமையும். காரணம் எதிர்கட்சியினரை விட எமது கட்சியினரிடமே பாதுகாப்பாக இருக்க வேண்டும். (nf)


 

 

Web Design by Srilanka Muslims Web Team