ஜனாஸாக்களை அடக்க மாவட்ட ரீதியில் காணிகளை இனங்காண செயலாளர்களுக்கு பணிப்பு..! - Sri Lanka Muslim

ஜனாஸாக்களை அடக்க மாவட்ட ரீதியில் காணிகளை இனங்காண செயலாளர்களுக்கு பணிப்பு..!

Contributors

(ஏ.ஆர்.ஏ.பரீல்)

கொவிட் தொற்­றினால் மர­ணிப்­ப­வர்­களின் உடல்­களை அடக்கம் செய்­வ­தற்கு மாவட்ட ரீதியில் காணிகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளன. ஒவ்­வொரு மாவட்­டத்­திலும் பொருத்­த­மான காணிகள் தொடர்பில் தாம­த­மில்­லாது அறி­விக்­கு­மாறு சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் டாக்டர் அசேல குண­வர்­தன அனைத்து மாவட்ட செய­லா­ளர்­க­ளுக்கும் அறி­வித்­துள்ளார்.

கொவிட் 19 தொற்­றினால் மர­ணிப்­ப­வர்­களின் உடல்­களை அடக்கம் செய்­வ­தற்கு சுகா­தார அமைச்சு பரிந்­து­ரைத்­துள்ள விட­யங்­களை உள்­ள­டக்­கிய பொருத்­த­மான காணியை தெரிவு செய்­யு­மாறே மாவட்ட செய­லா­ளர்­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பரிந்­து­ரைக்­கப்­படும் இடங்கள் கொவிட் 19 தொற்­றினால் மர­ணிப்­போரின் உடல்­களை அடக்கம் செய்­வ­தற்குப் பொருத்­த­மான இடமா என்­பது சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­களால் ஆரா­யப்­பட்ட பின்பே அனு­மதி வழங்­கப்­ப­டு­மெ­னவும் அவர் கூறினார்.

தற்­போது மட்­டக்­க­ளப்பு ஓட்­ட­மா­வடி சூடு­பத்­தின சேனையில் சுமார் 40 ஜனா­ஸாக்கள் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன.

இத­னி­டையே, கொவிட் 19 நோய்த் தொற்­றினால் மர­ணிக்கும் காலி மாவட்­டத்தைச் சேர்ந்த முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை நல்­ல­டக்கம் செய்­வ­தற்கு காலி மாவட்­டத்தில் 4 இடங்கள் இனங் காணப்­பட்­டுள்­ளன. இந்த 4 இடங்­களின் பெயர்கள் சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் மற்றும் காலி மாவட்ட செய­லாளர் ஆகி­யோ­ருக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக காலி மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர் மொஹமட் சகுர்தீன் தெரி­வித்தார். மேலும் அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம், திருகோமலை மாவட்டத்தின் கிண்ணியா ஆகிய பகுதிகளிலும் காணிகள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- 

Web Design by Srilanka Muslims Web Team