ஜப்பார் அலியின் மறைவு ஈடுசெய்ய முடியாதது - தௌபீக் » Sri Lanka Muslim

ஜப்பார் அலியின் மறைவு ஈடுசெய்ய முடியாதது – தௌபீக்

thoufik3

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயற்பாட்டுக்காக தனது உயிர்மூச்சு வரை மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவந்த கட்சியின் உயர்பீட உறுப்பினரும், முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கட்சியின் செயற்குழு உறுப்பினருமான எம்.ரி. ஜப்பார் அலி அவர்களின் மரணச் செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்துள்ளார்.

அகால மரணமடைந்த எம்.ரி. ஜப்பார் அலி அவர்களின் மறைவையிட்டு விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

அவர் சமூகம் மற்றும் மார்க்கம் சார் செயற்பாடுகளில் அதிக ஆர்வம் காட்டிவந்தார். ஆரம்பகாலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கத்தின் வளர்ச்சிக்கு அதிக பங்களிப்புச் செய்துள்ளார். சமூகத்தில் மதிக்கப்படும் மனிதரான இவர், மக்களுக்காக பல தியாகங்களை செய்துள்ளார்.

கடந்த காலங்களில் என்னிடம் வந்து கட்சி பற்றிய விடயங்களை பேசுவதுடன், எனக்கு சில ஆலோசனைகளையும் வழங்கினார். நிந்தவூர் மக்களின் பிரச்சினைகளை அடிக்கடி என்னிடம் பேசிக்கொள்ளும் ஒருவர். இவ்வாறு நல்ல பண்புகளைக் கொண்ட ஜப்பார் அலி இன்று எம்மை விட்டு பிரிந்துசென்றுள்ளார். அவரின் மறைவு ஈடுசெய்ய முடியாததொன்றாகும்.

அன்னாரின் சகல பாவங்களையும் இறைவன் மன்னித்து, மறுமைநாளில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்க கிடைக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக.

Web Design by The Design Lanka