ஜப்பார் அலி கட்சிப் போராளிகளின் மனங்களின் வாழ்ந்துகொண்டிருப்பார் -ரவூப் ஹக்கீம் » Sri Lanka Muslim

ஜப்பார் அலி கட்சிப் போராளிகளின் மனங்களின் வாழ்ந்துகொண்டிருப்பார் -ரவூப் ஹக்கீம்

hakeem

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டிவந்த நிந்தவூரைச் சேர்ந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், கட்சியின் மூத்த போராளிகளில் ஒருவரான எம்.ரி. ஜப்பார் அலி அவர்கள் சடுதியாக எம்மை விட்டுப் பிரிந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. இந்நேரத்தில் அன்னாரது பணிகளை மிகவும் நன்றியுடன் நினைவுகூருகிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு அகால மரணமடைந்த ஜப்பார் அலி குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

எங்களது கட்சியின் வளர்ச்சியில் ஆரம்பகாலத்தில், அவரது சகோதரர் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹஸன் அலியுடன் இணைந்து கட்சியின் வளர்ச்சியில் அதிக பங்காற்றிவந்த ஜப்பார் அலி, பின்னர் கட்சிக்கு ஏற்பட்ட பல சோதனைகளுக்கு மத்தியிலும் தலைமைத்துவத்தை விட்டுக்கொடுக்காமல் தலைவரின் கரங்களை பலப்படுத்துவதில் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தார்.

தனது இறுதி மூச்சுவரை கட்சிப் பணிக்காக தன்னை அர்ப்பணித்து செயற்பட்ட ஜப்பார் அலி இன்று எம்மை விட்டு மறைந்தாலும், கட்சிப் போராளிகளின் மனங்களின் அவர் என்றும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்.

அன்னாரில் பிரிவினால் துயருறும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் என்ற வகையில் கட்சி சார்பில் எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் மறுமை வாழ்வு பிரகாசமானதாக அமைவதுடன், மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனம் கிடைப்பதற்கும் பிரார்த்திக்கின்றேன்.

Web Design by The Design Lanka