ஜமாஅதே இஸ்லாமி அரசியல் கட்சியின் தலைவருக்கு இன்று மரண தண்டனை ! - Sri Lanka Muslim

ஜமாஅதே இஸ்லாமி அரசியல் கட்சியின் தலைவருக்கு இன்று மரண தண்டனை !

Contributors

பங்களாதேஷ் ஜமாஅதே இஸ்லாமி அரசியல் கட்சியின்   தலைவர்களில் ஒருவரான அப்துல் காதர் முல்லாஹ்வுக்கு   செவ்வாய் கிழமை 12:01 pm மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்  பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கல் மூலம் மரண தண்டனை விதிக்கப்பட்ட பட்டதாக  தெரிவிக்கப் படும் பங்களாதேஷின் இஸ்லாமிய இயக்க தலைவருக்கு மரண  தண்டனையை நிறைவேற்றுமாறு  யுத்த குற்ற நீதிமன்றம் சிறைச்சாலை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இது இந்த தகவல் அவரின் குடும்பத்துக்கு இன்று காலை அறிவிக்கப் பட்டுள்ளது .

பங்களாதேஷ் ஜமாஅதே இஸ்லாமி  அமைப்பின் உதவி செயலாளர்  அப்துல் காதர் முல்லாஹ் 1971 பங்களாதேஷ் சுதந்திர போராட்டத்தின் போது ‘மனித இனத்துக்கு எதிராக குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக’ ஹசீனாவின் விசேட யுத்த நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்த நீதிமன்றத்தின் செயற்பாடு குறித்து சர்வதேச அளவில் விமர்சனம் எழுந்துள்ளது.

மரணத்தை எதிர்கொள்ள தயாராகியுள்ள அப்துல் காதரிடம் இரு நீதிபதிகள் முன்னிலையில் நீங்கள் ஜனாதிபதியிடம் மன்னிப்பை வேண்டுகிறீர்களா  என்று கேட்கப் பட்ட போது அதை அவர் ”இல்லை’ என்று கூறி மறுத்து விட்டதாக அவரின் சட்டத் தரணி தெரிவித்துள்ளார்.

இணைப்பு -2:

இன்று பிற்பகல் 12:01 க்கு தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றப் படவிருந்த அப்துல் காதர் முல்லாஹ்வின் மரண தண்டனையை நாளை புதன் கிழமை காலை 10:30 மணிவரை நிறுத்தி வைக்குமாறு உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .

குறித்த மரண தண்டனை தீர்ர்ப்பு தொடர்பில் சர்வதேச கண்டனங்கள் வெளியானமை குறிப்பிடத் தக்கது .(lm)

Web Design by Srilanka Muslims Web Team