ஜமியத்துல் உலமாவும் தடையாகவேண்டும் - பொதுபல சேனா - Sri Lanka Muslim

ஜமியத்துல் உலமாவும் தடையாகவேண்டும் – பொதுபல சேனா

Contributors

அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபையை தடை செய்ய வேண்டும் என்று பொதுபல சேனா இயக்கம் தெரிவித்துள்ளது.

அந்த இயக்கத்தின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த கருத்தை வெளியிட்டார்.

ஜமியத்துல் உலமா சபையை மாத்திரமின்றி ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையையும் முழுமையாக இலங்கையினுள் ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை கடந்த முதலாம் திகதி தொடக்கம் தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டது.

அதற்கு பதில் கருத்துக்களை வெளியிடும் நோக்கிலேயே பொதுபலசேனா இன்று கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்திருந்தது.

ஹலால் சான்றிதழை வெளியிடும் போது சுயாதீன மற்றும் தேசிய மட்டத்திலான வேலைத்திட்டத்திற்காக முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜமியத்துல் உலமா சபையின் பேச்சாளர் அஸ்லம் சுபையிர் தெரிவித்தார்.

இந்தநிலையில், ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டமையை அனுமதிக்க முடியாது என்று இலங்கை முஸ்லிம்களின் ஷுரா சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே, இலங்கையில் பயன்பாட்டில் உள்ள உணவுப் பொருட்களுக்கான தரச் சான்றிதழ்களை வழங்கும் ஒரே நிறுவனம், தமது நிறுவனம் என்று இலங்கை தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் பணிப்பாளர் லலித் சேனவீர தெரிவித்துள்ளார்.(sfm)

Web Design by Srilanka Muslims Web Team